சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., நிர்வாகி வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு

Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 தி.மு.க., நிர்வாகி வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு

மதுரை : தி.மு.க., நிர்வாகி வீட்டில், மண்ணெண்ணெய் குண்டு வீசிய, நான்கு பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை, கீழ்மதுரை ரயில்வே ஸ்டேஷன் எதிரே, மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவரும், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினருமான, குருசாமி வீடு உள்ளது.நேற்று அதிகாலை, 5:45 மணிக்கு, இரு, 'டூ - வீலர்'களில் வந்த, நான்கு பேர், குருசாமி வீட்டின் மீது, மண்ணெண்ணெய் பாட்டில் குண்டுகளை வீசினர்.அவை வெடித்து, கதவு, அதன் மேல் பகுதியில் கரும்புகை படர்ந்தது. வீட்டில் குருசாமியின் மனைவி, மகன், பேரன்கள் இருந்தனர்; குருசாமி இல்லை. கொலை மிரட்டல் விடுத்த நான்கு பேரும், அருகில் வசிப்பவர்கள் நிறுத்தியிருந்த கார், ஆட்டோ, டூ - வீலர்களை சேதப்படுத்தி, தப்பிச் சென்றனர்.

விசாரணையில், அவர்கள், மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜபாண்டியின் உறவினர், காளி என்பவர் தரப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிந்தது.இது தொடர்பாக, அருப்புக்கோட்டை பகுதியில், இருவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். போலீசார் கூறியதாவது:குருசாமி, ராஜபாண்டி தரப்பினர் இடையே, 2003 முதல், அரசியல் முன்விரோதம் இருந்து வருகிறது.இரு தரப்பிலும், மாறி மாறி இதுவரை, 20க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலம் பாதித்து, ராஜபாண்டி இறந்தார்.அவர் தரப்புக்கு, தற்போது, காளி தலைமை வகிக்கிறார்.

2003ல், காளியின் அண்ணன் சின்னமுனுசு கொலை செய்யப்பட்டது தான், இருதரப்பிற்கும் பிரச்னை எழ காரணம். மூன்று ஆண்டுகளுக்கு முன், இதேபோல் குருசாமி வீட்டின் மீது தாக்குதல் நடத்திய போது, போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், குற்றவாளிகள் ஓட்டம் பிடித்தனர். தற்போதும், குருசாமியை குறி வைத்தே தாக்குதல் நடந்துள்ளது. குற்றவாளியை தேடி வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
29-ஜூலை-202007:10:32 IST Report Abuse
RaajaRaja Cholan என்னடா உலகம் இது , ஒரு மரியாதை இல்லை. மண்ணெண்னைக்கு கொஞ்சம் கூட மரியாதை இல்லையா இவ்வளவு கேவல படுத்தி இருக்க வேண்டாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X