மழைநீர் வடிகால் கட்ட ஆக்கிரமிப்பு அகற்றம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழைநீர் வடிகால் கட்ட ஆக்கிரமிப்பு அகற்றம்

Added : ஜூலை 28, 2020
Share
 மழைநீர் வடிகால் கட்ட ஆக்கிரமிப்பு அகற்றம்

திருப்பூர்:ராயபுரம் பகுதியில் வடிகால் கட்டும் பணிக்காக ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், சூசையாபுரம் ஆகியன முக்கியமான குடியிருப்பு பகுதிகள். இதில், ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி, பி.எஸ்.என்.எல். பிரதான அலுவலகம், அரசு ஊழியர் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களும் உள்ளன.ராயபுரம் பகுதியில் புதிதாக மழை நீர் வடிகால் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அளவீடு பணிகள் துவங்கியுள்ளன. ஆனால், ரோட்டின் இரு புறமும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளது தெரிய வந்தது. வீடு மற்றும் கடை வைத்துள்ளவர்கள், கட்டடங்களின் முன்புறம் பந்தல், ெஷட் உள்ளிட்டவை அமைத்து ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்தனர்.மழை நீர் வடிகால் அமைக்க அங்கு அளவீடு செய்யச் சென்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு இது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதி முழுவதும் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X