பொது செய்தி

இந்தியா

இந்தியாவை ஆத்திரமூட்ட பாகிஸ்தான் புது திட்டம்

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
India, Pakistan, Imran Khan, conflict, india govt, august 5, இந்தியா, பாகிஸ்தான், இம்ரான்

புதுடில்லி : ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஓராண்டு முடிய, சில தினங்களே உள்ள நிலையில், இந்தியாவுக்கு ஆத்திரமூட்டும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்த, பாக்., அரசும், அதன் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., யும் திட்டமிட்டுள்ளன.

மத்திய அரசு, 2019, ஆக.,5ல், ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும 370வது அரசிய லமைப்பு சட்டப் பிரிவு நீக்கியது. அத்துடன், லடாக்கை பிரித்து, யூனியன் பிரதேசமாக அறிவித்தது. இதனால் கடுப்பான பாக்., வரும், ஆக.,5ல் இந்தியாவுக்கு எதிரான நிகழ்ச்சிகளை, உலகளவில் நடத்த உள்ளது.

இது குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட, ஆக.,5ம் தேதியை, 'கறுப்பு நாள்' ஆக கடைப்பிடிக்க, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஐ.எஸ்.,செய்தி தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது. அதற்கு முன், ஆக., 4ம் தேதி, ஐ.நா.,ராணுவ மேற்பார்வை குழுவை, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு வரவழைத்து, மக்கள் சுதந்திரமாக உள்ளதை காட்ட, பாக்., திட்டமிட்டுள்ளது.

இக்குழுவை காஷ் மீருக்கும் அனுப்ப, பாக்., முயற்சி மேற்கொண்டுள்ளது. அப்போது, காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரும் வெள்ளை அறிக்கையை, ஐ.நா., குழுவிடம் பாக்., வழங்கவுள்ளது. பாக்., பிரதமர், இம்ரான்கான், ஆக.,5ல், பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டசபையில் உரையாற்ற உள்ளார். அப்போது, அவர் காஷ்மீர் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிடுவார் என, தெரிகிறது.

சர்வதேச ஊடகங்கள் மூலம், காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவை கடுமையாக விமர்சித்து, புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவதற்கான ஏற்பாடுகளையும் பாக்., செய்து வருகிறது. அத்துடன், உலக நாடுகளில் உள்ள, பாக்., துாதரகங்கள், இந்தியாவுக்கு எதிரான பேரணிகளை நடத்த வேண்டும் எனவும், ஐ.எஸ்.ஐ., உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
31-ஜூலை-202003:55:42 IST Report Abuse
J.V. Iyer துஷ்டனை கண்டால் தூர விலகு என்று பாகிஸ்தானை பொறுத்தவரையில் இருக்கக்கூடாது. அவர்களுக்கு எப்போதும் குடைச்சல் கொண்டிருக்கவேண்டும். அப்போதுதான் அடங்குவார்கள்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
29-ஜூலை-202022:22:27 IST Report Abuse
konanki சுடலு கான் இம்ரான் கான் கூட்டணி அமைத்து ஆகஸ்ட் 5 அன்று ஆர்ப்பாட்டம்
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
29-ஜூலை-202021:08:09 IST Report Abuse
Nagarajan D அந்த சின்ன பிள்ளைத்தனமான விளையாட்டை காந்தி குடும்பத்துக்கிட்ட ஆடுங்கடா. இப்ப நடப்பது சிங்கத்தின் ஆட்சி.... துவம்சம் ஆயிடுவீங்க.... ஆனான பட்ட சீனாவே செத்த எலி மாதிரி கதறிக்கிட்டு ஓடிட்டானுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X