இந்தியாவை ஆத்திரமூட்ட பாகிஸ்தான் புது திட்டம்| From honouring separatists to rallies worldwide, Pakistan finds nefarious ways to irk India on August 5 | Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவை ஆத்திரமூட்ட பாகிஸ்தான் புது திட்டம்

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (20)
Share
India, Pakistan, Imran Khan, conflict, india govt, august 5, இந்தியா, பாகிஸ்தான், இம்ரான்

புதுடில்லி : ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஓராண்டு முடிய, சில தினங்களே உள்ள நிலையில், இந்தியாவுக்கு ஆத்திரமூட்டும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்த, பாக்., அரசும், அதன் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., யும் திட்டமிட்டுள்ளன.

மத்திய அரசு, 2019, ஆக.,5ல், ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும 370வது அரசிய லமைப்பு சட்டப் பிரிவு நீக்கியது. அத்துடன், லடாக்கை பிரித்து, யூனியன் பிரதேசமாக அறிவித்தது. இதனால் கடுப்பான பாக்., வரும், ஆக.,5ல் இந்தியாவுக்கு எதிரான நிகழ்ச்சிகளை, உலகளவில் நடத்த உள்ளது.

இது குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட, ஆக.,5ம் தேதியை, 'கறுப்பு நாள்' ஆக கடைப்பிடிக்க, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஐ.எஸ்.,செய்தி தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது. அதற்கு முன், ஆக., 4ம் தேதி, ஐ.நா.,ராணுவ மேற்பார்வை குழுவை, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு வரவழைத்து, மக்கள் சுதந்திரமாக உள்ளதை காட்ட, பாக்., திட்டமிட்டுள்ளது.

இக்குழுவை காஷ் மீருக்கும் அனுப்ப, பாக்., முயற்சி மேற்கொண்டுள்ளது. அப்போது, காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரும் வெள்ளை அறிக்கையை, ஐ.நா., குழுவிடம் பாக்., வழங்கவுள்ளது. பாக்., பிரதமர், இம்ரான்கான், ஆக.,5ல், பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டசபையில் உரையாற்ற உள்ளார். அப்போது, அவர் காஷ்மீர் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிடுவார் என, தெரிகிறது.

சர்வதேச ஊடகங்கள் மூலம், காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவை கடுமையாக விமர்சித்து, புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவதற்கான ஏற்பாடுகளையும் பாக்., செய்து வருகிறது. அத்துடன், உலக நாடுகளில் உள்ள, பாக்., துாதரகங்கள், இந்தியாவுக்கு எதிரான பேரணிகளை நடத்த வேண்டும் எனவும், ஐ.எஸ்.ஐ., உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X