பொது செய்தி

தமிழ்நாடு

பாதித்த குடும்பங்களுக்கு நிவாரணம்: வழக்கு விபரம் தயாரிக்கும் போலீஸ்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

ஆனைமலை:வால்பாறை சப் - டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில், விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தோருக்கு, அரசு நிவாரணத்தொகை வழங்க, போலீசார் நடவடிக் கை எடுத்து வருகின்றனர்.தமிழகம் முழுவதிலும் விபத்தால், இறந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்கள், கொலை சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு, அரசு நிவாரண நிதி வழங்கி வருகிறது.தற்போது, கோவை மாவட்ட எஸ்.பி., அருளரசு உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதிலும், பாதிக்கப்பட்டோர் பட்டியல் சேகரித்து நிவாரணத்தொகை வழங்கி வருகின்றனர்.
ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு போலீஸ் ஸ்டேஷன்களில், பாதித்தோர் பட்டியல் சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நபர்களின் வீடு தேடிச்சென்று, அவர்களிடம் விண்ணப்பம் பெற்று வருகின்றனர்.டி.எஸ்.பி., விவேகானந்தன் கூறியதாவது:தமிழக அரசு, போலீஸ் வாயிலாக, விபத்தில் காயமடைந்தோருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரையிலும், விபத்தில் இறந்தோர் மற்றும் கொலை வழக்குகளால் பாதித்த குடும்ப உறுப்பினர்களுக்கு, ஒன்று முதல் மூன்று லட்சம் ரூபாய் வரையில், நிவாரண நிதி வழங்கப்படுகிறது.பட்டியல் இனத்தவர்களுக்கு பாதிப்பை பொறுத்து, எட்டு லட்சம் ரூபாய் வரை நிவாரணம் வழங்கப்படுகிறது.
வால்பாறை சப் - டிவிஷனுக்கு உட்பட்ட, ஏழு போலீஸ் ஸ்டேஷன்களில் கடந்த ஐந்தாண்டுகளில், 16 கொலை வழக்கு, பத்து கொலை முயற்சி வழக்கு, பல்வேறு வழக்குகளில் படுகாயமடைந்தோர், 16 பேர் மற்றும் விபத்தில், 309 பேர் இறந்துள்ளனர். இதில் நிவாரணம் பெறாத மற்றும் விண்ணப்பிக்காத, 225 வழக்குகளை கண்டறிந்துள்ளோம்.விரைவில் நிவாரணம் வழங்கப்படும். இதுவரை நிவாரணம் பெறாதவர்கள், வழக்கு பதிவான அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் சென்று விண்ணப்பித்தால் போதும், அரசு நிவாரணத்தொகை பெற்றுத்தரப்படும்.இவ்வாறு, டி.எஸ்.பி., தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X