பொது செய்தி

தமிழ்நாடு

பூங்கா மரங்கள் வெட்டி அகற்றம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:சின்னாம்பாளையம் ஊராட்சியில், கட்டடம் கட்டுவதற்காக பூங்கா இடத்தில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டதாக, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:சின்னாம்பாளையம் ஊராட்சியில், விநாயகா கார்டன்ஸ் பகுதியில் அரசுக்கு சொந்தமான பூங்கா இடத்தில், அரசால் அறிவிக்கப்பட்ட பசுமை பாதுகாப்பு, மரங்கள் வளர்ப்பு திட்டத்தில், 100க்கும் மேற்பட்ட நாவல், புங்கன், வேப்ப மரம் வளர்க்கப்படுகிறது.மேலும், பசுமை சூழலை உருவாக்க கூடிய காட்டு மரங்கள் நடப்பட்டு, ஒன்பது ஆண்டுகளாக பராமரிக்கப்படுகிறது. சின்னாம்பாளையம் ஊராட்சி பூங்கா இடத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள் செழித்து வளர்ந்துள்ளது. பலதரப்பட்ட பறவைகள் கூட்டம், கூட்டமாக வருகின்றன.கடந்த சில நாட்களுக்கு முன், ஊராட்சி சார்பில் கட்டடம் கட்ட எவ்வித முன் ஏற்பாடுமின்றி, அந்த இடத்தில் செழித்து வளர்ந்த, 60க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தை வேறு பயன்பாட்டிற்கு மாற்றக்கூடாது என, அரசு உத்தரவும், கோர்ட் தீர்ப்பும் உள்ளது. எனவே, பூங்கா இடத்தை ஆய்வு செய்து, மீண்டும் பசுமை பூங்காவாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X