பொது செய்தி

தமிழ்நாடு

குடியிருப்பில் தீண்டாமை வேலி கலெக்டர் பதில் அளிக்க உத்தரவு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சென்னை : பழங்குடியின மக்கள் குடியிருப்பை சுற்றி, தீண்டாமை வேலி அமைத்துள்ள விவகாரம் தொடர்பாக, விழுப்புரம் கலெக்டர் பதில் அளிக்க, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், வானுார், ஆதியன் பழங்குடியின மக்கள், 15 ஆண்டுகளாக சாலையோர புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்தனர். அந்த மக்கள், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தனர். ஆனால், வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை.இந்நிலையில், திருச்சிற்றம்பலம் ஊராட்சியில், 2018ல், இலவச பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தில், இரண்டு ஆண்டுகளாக, அம்மக்கள் வீடு கட்டி வசிக்கின்றனர்.

தற்போது, அதே பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட பிரிவினர், அந்த மக்கள் வீடுகளில் இருந்து, வெளியே வர முடியாத வகையில், பாதையில் கம்பி வேலி அமைத்து உள்ளனர். இது குறித்து, அப்பகுதி மக்கள், வானுார் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.இது குறித்து, மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.ஆணைய நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ், விழுப்புரம் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய நோட்டீசில், 'பழங்குடியின மக்கள் குடியிருப்பை சுற்றி தீண்டாமை வேலி அமைத்த விவகாரம் தொடர்பாக, நான்கு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X