சேலம் 8 வழி சாலை திட்டம்: பதிலளிக்க ஒரு வாரம் அவகாசம்

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement
புதுடில்லி: தமிழகத்தில், சென்னை - சேலம் இடையேயான, எட்டு வழி சாலை திட்டம் தொடர்பாக, கூடுதல் அறிக்கை தாக்கல் செய்வதற்கு, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகத்துக்கு, உச்ச நீதிமன்றம், ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளது.சென்னை - சேலம் இடையேயான, 277 கி.மீ., துார சாலையை, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், எட்டு வழி சாலையாக மாற்றும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது.
சேலம், 8 வழி சாலை, உச்ச நீதிமன்றம், அவகாசம்

புதுடில்லி: தமிழகத்தில், சென்னை - சேலம் இடையேயான, எட்டு வழி சாலை திட்டம் தொடர்பாக, கூடுதல் அறிக்கை தாக்கல் செய்வதற்கு, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகத்துக்கு, உச்ச நீதிமன்றம், ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளது.

சென்னை - சேலம் இடையேயான, 277 கி.மீ., துார சாலையை, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், எட்டு வழி சாலையாக மாற்றும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையும் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு, விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டன. இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் அறிவிப்புக்கு, சென்னை உயர் நீதிமன்றம், கடந்தாண்டு, ஏப்., 8ல் தடை விதித்தது. இதை எதிர்த்து, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: 'பாரத் மாலா பரியோஜனா' என்ற திட்டத்தின் கீழ், நாடு முழுதும், நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை - சேலம் நெடுஞ் சாலை திட்டத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. இதனால், இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடைக்கு, தடை விதிக்க வேண்டும்.

இந்த வழக்கு தொடர்பாக, கூடுதல் தகவல்களை தாக்கல் செய்வதற்கு அவகாசம் அளிக்க வேண்டும். இவ்வாறு, மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.இதை ஏற்றுக் கொண்ட அமர்வு, ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளது. வழக்கின் விசாரணை, ஆக., 6க்கு ஒத்தி வைக்கப் பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஜூலை-202019:25:08 IST Report Abuse
ஸ்டாலின் :: மாநிலங்களுக்குச் சேர வேண்டிய ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு அளிக்கும் நிலையில் இல்லை: மத்திய நிதிச் செயலர்
Rate this:
Cancel
29-ஜூலை-202018:54:25 IST Report Abuse
ஸ்டாலின் :: இந்த மாதிரி விஷயங்களுக்காக தான் EIA என்று ஒரு சட்டம் கொண்டு வந்து விட்டார்கள் இனி 2000-10000 ஏக்கரில் தொழில் தொடங்கினாள் இனி எவனினும் கேட்க்க தேவை இல்லை என்று தான் சட்டம் கொண்டு வர உள்ளனரே
Rate this:
Cancel
IRAIVI -  ( Posted via: Dinamalar Android App )
29-ஜூலை-202018:22:38 IST Report Abuse
IRAIVI For those who are shedding crocodile tears, within 30 years, from Chengleput to Kanchipuram to Gummidipoondi (a half circle) lakhs and lakhs of fertile, lakes irrigated agricultural lands have been converted in to industrial / housing plots. Everything was done by DMK / AIADMK. Did all the land owners gave their lands with happiness? The pherpherals of every city / town in Tamil Nadu, agriculture lands were converted into housing / industrial plots. All NASTY POLITICAL DRAMAS. Unfortunately there are enough slaves under these politicians to blindly support them. They never bother about the Country nor their future generations. All TASMAC Slaves.
Rate this:
Rajas - chennai,இந்தியா
29-ஜூலை-202023:04:40 IST Report Abuse
RajasDid the farmers then in Chengalpet, Kanchipuram, Gummidipoondi oppose the move of the Government to convert their lands into Dwelling houses or industrial Units. Further, when a city develops the lands next to city, automatically become commercial areas. is the 8 way road project near a city. Why did the ganges become so polluted in the last 20 years...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X