பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுப்பயிராக மாறியது முருங்கை ஆறே மாதத்தில் காய் பறிக்கலாம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
 மாற்றுப்பயிராக மாறியது முருங்கை ஆறே மாதத்தில் காய் பறிக்கலாம்

மடத்துக்குளம்:மடத்துக்குளத்தில், போதிய லாபம் கிடைப்பதால், மாற்றுப்பயிராக முருங்கை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.மடத்துக்குளம் ஆயக்கட்டு பகுதிகளில், சிக்கனமான பாசனநீர், குறைந்த பராமரிப்பு ஆகியவற்றில் பலன் தரும் பயிர்களில், முருங்கை சாகுபடி முக்கியமானதாக உள்ளது. இதில் பல விவசாயிகள்ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:செடி முருங்கை, மரம் முருங்கை என இருவகை உள்ளது. குறைந்த பராமரிப்பு, கூடுதல் லாபம் உள்ளதால் பெரும்பாலான விவசாயிகள் செடி முருங்கையை தேர்வு செய்கின்றனர். விதைத்து 10 நாட்களுக்குள் முளைத்து விடும்.சிறிது வளர்ந்த பின்பு, கொழுந்து பகுதிகளை கிள்ளிவிட வேண்டும். நான்கு மாதம் வளர்ந்த பின் பூக்க ஆரம்பித்து விடும். ஆறு மாதங்களில் காய்கள் பறிக்கத் தொடங்கலாம்.தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு காய்களை அறுவடை செய்யலாம். ஒரு ஆண்டுக்கு, ஒரு மரத்தில், 200 முதல் 300 காய்கள் வரை, அதாவது, 20 முதல் 30 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.தொடர்ந்து, நான்கு ஆண்டுகளுக்கு பலன் தரும். பின், அந்த மரங்களை அகற்றிவிட்டு மாற்றுப் பயிர் செய்யலாம். முருங்கை சாகுபடிக்கு அதிக தொழிலாளர்கள் தேவைப்படுவதில்லை.உரம், இடுபொருட்கள் செலவும் குறைவுதான். ஆண்டு முழுவதும் தேவை உள்ளதால், நிரந்தரமான வருவாயை முருங்கை வழங்குகிறது.இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X