திருமண உதவித்தொகை கிடைப்பதில் தாமதம்: திட்ட பயனாளிகள் வேதனை

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலையில், ஓராண்டை கடந்தும் திருமண உதவித்தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், பயனாளிகள் வேதனையடைந்து ள்ளனர்.சமூக நலத்துறையின் சார்பில், திருமண உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திட்டத்தில், பத்தாம் வகுப்பு வரை முடித்த பெண்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாயும், இரண்டு பிரிவினருக்கும், ஒரு பவுன் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.ஒன்றிய அலுவலகங்களில், இதற்கான விண்ணப்பங்கள் பெற்று, சேவை மையங்களில், 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.திட்டத்தில் பயன்பெறுவோரின் பெற்றோருக்கான ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும். மேலும், திருமணத்துக்கு முன்பு, 40 நாட்களுக்குள் திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.இத்திட்டத்தில், பதிவு வரிசைப்படி தான் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில், உடுமலையில் கடந்த 2018-19ம் ஆண்டு பயனாளிகளில், ஒரு பகுதியினருக்கு தொகை மற்றும் தங்க நாணயம் வழங்கப்பட்டது.தற்போது, 2019-20 நிதியாண்டு முடிந்துள்ள நிலையில், உதவித்தொகை பெற விண்ணப்பித்திருந்த பயனாளிகள் வேதனையடைந்து வருகின்றனர். திட்டத்தில் விண்ணப்பித்து, பலருக்கும் இரண்டாண்டுகள் கழித்து தான், அரசின் சார்பில் தொகை வழங்கப்படுகிறது. இதனால், திட்டத்தில் முழுமையாக பயன்பெற முடிவதில்லை என பயனாளிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனால், புதிதாக விண்ணப்பிப்போரும் திட்டத்தில் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X