பத்திரப்பதிவு உட்பிரிவு கட்டணம்: 10 மடங்கு அதிகரிப்பால் பாதிப்பு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி;பதிவுத்துறை இணையதளத்தில், தற்காலிக ஆவண சுருக்கம் உருவாக்கப்படும்போது, ஆவண மதிப்பீட்டில் ஒரு சர்வே எண்ணுக்கு, 40 ரூபாய் என்பது, 400 ரூபாயாக உயர்த்தப்பட்டு, பத்திரப்பதிவின் போது வசூல் செய்யப்படுகிறது.சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுகள் 'ஆன்லைன்' வாயிலாக செய்யப்படுகிறது. இதில், ஒரு பத்திரம் பதிவு செய்யும்போது, ஒரு சர்வே எண்ணுக்கு, 40 ரூபாய் உட்பிரிவு கட்டணம் வசூலிக்கப்பட்டு, பட்டா மாறுதலுக்கு வருவாய்துறைக்கு, சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து தவகல் அனுப்பப்பட்டு வந்தது.இந்நிலையில், நில அளவை தொடர்பாக, 10 மடங்கு கட்டணம் உயர்த்தபட்டுள்ளதால், இக்கட்டணம் பதிவுதுத்துறை இணையதளத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பத்திரப்பதிவுக்கு முன் பதிவுத்துறை இணையதளத்தில் தற்காலிக ஆவண சுருக்கம் உருவாக்கப்படும்போது, ஆவண மதிப்பீடு பக்கத்தில் ஒரு சர்வே எண்ணுக்கு, 40 ரூபாய் என்பதற்கு பதிலாக, 400 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.இக்கட்டண உயர்வு, கடந்த, 25ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் உட்பிரிவு கட்டணம் ஒரு சர்வே எண்ணுக்கு, 400 ரூபாய் செலுத்த வேண்டும் என பதிவுத்துறை இணையதளம் அறிவுறுத்துக்கிறது.கட்டண உயர்வை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X