நகராட்சி ஊழியர்கள் மூவருக்கு தொற்று | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகராட்சி ஊழியர்கள் மூவருக்கு தொற்று

Added : ஜூலை 28, 2020
Share

பல்லடம்;பல்லடம் நகராட்சியில் நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 3 பேருக்கு தொற்று உறுதியானது.பல்லடம் நகராட்சியில் பணியாற்றும், பெண் ஒருவர் உட்பட, துாய்மை காவலர்கள், 3 பேருக்கு, நேற்று நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.வடுகபாளையம் புதுார், பச்சாபாளையம், மற்றும் பணப்பாளையம் பகுதிகளை சேர்ந்த, மூன்று பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், நகராட்சி கமிஷனர், பொறியாளர் உட்பட, ஊழியர்கள் அனைவருக்கும் நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.தூய்மை காவலர்கள் குடியிருக்கும் பகுதிகளில், கிருமிநாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X