இந்தியாவில் ஒரே நாளில் 35,000 பேர் குணமடைந்தனர்!| Over 30,000 covid-19 patients cured in India in a single day | Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 35,000 பேர் குணமடைந்தனர்!

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (5)
Share
புதுடில்லி: 'மக்களிடம் கொரோனா விழிப்புணர்வு அதிகரித்து வருவதையடுத்து, வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில், 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தனர். மேலும், கொரோனாவுக்கு பலியானோர் சதவீதமும், 2.21 ஆக குறைந்துள்ளது' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாட்டில், கொரோனா பரவல், கடந்த மார்ச் மாதம்
corona update, covid 19 India, India fights corona, coronavirus crisis, coronavirus update, lockdown, quarantine, curfew, india, coronavirus, covid19

புதுடில்லி: 'மக்களிடம் கொரோனா விழிப்புணர்வு அதிகரித்து வருவதையடுத்து, வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில், 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தனர். மேலும், கொரோனாவுக்கு பலியானோர் சதவீதமும், 2.21 ஆக குறைந்துள்ளது' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில், கொரோனா பரவல், கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரமடைந்துள்ளது. இதைத் தடுக்க, நாடு முழுதும், மார்ச், 25ல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்பின், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, தொடர்ந்து அமலில் உள்ளது.வைரஸ் பரவல் அதிகரித்து வந்தாலும், அதிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக, தினமும், 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே சமயம் தினமும், 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர், குணமடைந்து வருகின்றனர்.


பலி குறைவு:

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில், கொரோனா தொற்றால் பலியாவோரின் விகிதம், தொடர்ந்து குறைந்து வருகிறது. சர்வதேச அளவில், கொரோனா பலி குறைவாக உள்ள நாடாக இந்தியா உள்ளது. நாட்டில், ஜூன் மாத மத்தியில், கொரோனாவுக்கு பலியானோர் சதவீதம், 3.33 ஆக இருந்தது. ஆனால், இப்போது. 2.25 சதவீதமாக குறைந்து விட்டது.

தொடர்ந்து, ஐந்தாவது நாளாக, தினமும், 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில், 35 ஆயிரத்து, 176 பேர் குணமடைந்து உள்ளனர். கடந்த ஜூன் மத்தியில், குணமடைவோர் சதவீதம், 53 ஆக இருந்தது. இப்போது, 64.24 சதவீதமாக அதிகரித்துள்ளது. தரமான சிகிச்சைகுணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, குணமடைந்தோர், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கைகளுக்கு இடையே உள்ள வித்தியாசமும், வேகமாக அதிகரித்து வருகிறது.

நோய் தொற்றை துவக்கத்திலேயே கண்டு பிடித்து, பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் தான், குணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பற்றி விழிப்புணர்வு, மக்களிடம் அதிகரித்துள்ளதும், இதற்கு முக்கிய காரணம். இந்த விழிப்புணர்வை மக்கள் தொடர்ந்து கடைப்பிடித்தால், இன்னும், இரண்டு மாதங்களில், கொரோனா பரவலை முற்றிலும் கட்டுப்படுத்தி விடலாம். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


9.53 லட்சம் பேர் குணம்:

நாட்டில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில், நேற்று வரை, 9.53 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரை கண்டறிய, நாடு முழுதும், தீவிர பரிசோதனை நடத்தப்படுகிறது. இதன் வாயிலாக, நேற்று, 47 ஆயிரத்து, 703 பேரிடம் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 14 லட்சத்து, 83 ஆயிரத்து, 156 பேர், வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 9.53 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பால், நேற்று, மஹா.,வில், 227 பேர்; தமிழகத்தில், 77; கர்நாடகாவில், 75; ஆந்திராவில், 49; மே.வங்கத்தில், 39; உ.பி.,யில், 30; டில்லியில், 26; குஜராத்தில், 22 பேர் உள்ளிட்ட, 654 பேர் இறந்துள்ளனர்.இதையடுத்து, ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை, 33 ஆயிரத்து, 425 ஆக உயர்ந்துள்ளது.

இதில், 13 ஆயிரத்து, 883 பேருடன், மஹா., முதலிடத்தில் தொடர்கிறது. டில்லியில், 3,853; தமிழகத்தில், 3,571; குஜராத்தில், 2,348; கர்நாடகாவில், 1,953; உ.பி.,யில், 1,456; மே.வங்கத்தில், 1,411; ஆந்திராவில், 1,090 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X