சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டெண்டர் திறப்பில் மெத்தனம் அதிகாரியை கண்டித்து போராட்டம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பொதுநிதியில் மேற்கொள்ளவுள்ள ரோடு, கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட 15 பணிகளுக்கான டெண்டர் திறப்பு நேற்று நடந்தது. மாலை, 3:00 மணி வரை டெண்டர் பெட்டியில் சேர்க்கப்பட்ட படிவங்கள் 4:00 மணிக்கு திறக்கப்பட வேண்டும்.ஆனால், செயற்பொறியாளர் திருமுருகன் மாலை 5:30 மணி வரை வரவில்லை.அதன்பின், அவரது அலுவலக ஊழியர்கள் டெண்டர் பெட்டியை திறந்துள்ளனர். நீண்ட நேரத்துக்கு பின் வந்த திருமுருகன், அங்கு காத்திருந்த ஒப்பந்ததாரர்களை, இரண்டு பேராக மட்டும் உள்ளே அழைத்துள்ளார். இதற்கு ஒப்பந்ததாரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.தங்களை மரியாதை குறைவாக திருமுருகன் பேசியதாக கூறி, ஒப்பந்ததாரர்கள் அலுவலக வாயிலில், போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு ஒப்பந்ததாரர் தனது சட்டையைக் கழற்றி விட்டு அமர்ந்தார். போலீசார் சமாதானம் செய்தனர்.இது குறித்து நாளை (இன்று) கமிஷனரை சந்தித்து புகார் தெரிவிக்க முடிவு செய்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X