பொது செய்தி

தமிழ்நாடு

மாயமாச்சு...'ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கான தடை

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

திருப்பூர்:கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் அதிகாரிகள் கவனம் செலுத்தி வரும் நிலையில், திருப்பூரில், 'ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கான தடை' என்பதே, காணாமல் போயுள்ளது.
தமிழகத்தில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும், பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை, கடந்த ஆண்டு, ஜன., 1 முதல் அமலுக்கு வந்தது. முதலில் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வந்த தடை, நாளடைவில், தொய்வைச் சந்தித்தது.ஊரடங்கு துவங்கியது முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், அதிகாரிகள் கவனம் செலுத்தத் துவங்கினர். இந்நிலையில், பிளாஸ்டிக் தடை நடவடிக்கை முழுமையாக மாயமாகியுள்ளது. திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும், தங்கு தடையின்றி, பாலிதீன் கவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:மளிகை, ஓட்டல், பூ, பலகாரம் மற்றும் இறைச்சிக்கடைகளில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும், பாலிதீன் கேரி பேக்குகள், பாலிதீன் கவர்கள் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன.பொதுமக்களும் பைகளைக் கொண்டு சென்று, பொருட்கள் வாங்க வேண்டும் என்பதை மறந்து, கேரி பேக்குகளைக் கேட்டு, பொருட்களை வாங்கிச்செல்கின்றனர். ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்க முடியாமல், அந்த இடத்தில் இருந்தே தடை செய்தால்தான், பிளாஸ்டிக் ஒழிப்பு சாத்தியமாகும். குறிப்பாக, பொதுமக்கள், வியாபாரிகள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
சாலைகள் அமைப்பு, வீட்டு உபயோகப்பொருட்கள் தயாரிப்பு, மின் உற்பத்தி, சிமென்ட் ஆலைகளில் இணை எரிபொருள் போன்ற பயன்பாடுகளுக்கு, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முடியும்.பிளாஸ்டிக் குப்பைகளை முறையாகச் சேகரித்து, மறுசுழற்சி மூலம் பயன்படுத்த, அரசு நெறிமுறைகள் உள்ளன.
இதை முறையாகப் பின்பற்ற வேண்டும்.துணி, காகிதம், சணல் பை, பீங்கான் பொருட்கள், உண்ணக்கூடிய வகையிலான தேக்கரண்டி, வாழையிலை, பாக்குத் தட்டு, தாமரை இலை, உலோக குவளைகள், மூங்கில், காகித உறிஞ்சு குழாய்கள் போன்றவை, பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இருந்தாலும், இவற்றின் பயன்பாடு அதிகரிக்காமல் உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X