பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவு பொருள் வினியோகம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
 அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவு பொருள் வினியோகம்

வால்பாறை:வால்பாறையில், பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு பொருட்கள் வழங்கப்பட்டன.வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளில் மொத்தம், 89 சத்துணவு மையங்கள் உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பள்ளிகள் மூடப்பட்டன. பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளியில் சத்துணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில் படிக்கும், மூவாயிரம் மாணவர்களுக்கு சத்துணவு பொருட்கள் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் வினியோகம் செய்யப்படுகின்றன.பள்ளிக்கு மாணவர்களை வரவழைத்து நேரில் வழங்குகின்றனர். துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு, 3.100 கிலோ அரிசி, 1.200 கிலோ பருப்பு வழங்கப்படுகிறது. நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, 4.650 கிலோ அரிசியும், 1.250 கிலோ பருப்பும் வழங்கப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X