பொது செய்தி

தமிழ்நாடு

மானாவாரி சாகுபடிக்கு தயாராகும் விளைநிலங்கள்: வேளாண்துறை உதவிக்கு எதிர்பார்ப்பு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
 மானாவாரி சாகுபடிக்கு தயாராகும் விளைநிலங்கள்: வேளாண்துறை உதவிக்கு எதிர்பார்ப்பு

உடுமலை:மானாவாரி சாகுபடிக்காக விளைநிலங்களை தயார்படுத்தும் நிலையில், வேளாண்துறையின் உதவியை உடுமலை பகுதி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, மானாவாரி சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.குறிப்பாக, கரிசல் மண் விளைநிலங்களில், கொத்தமல்லி, கொண்டைக்கடலை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. தென்மேற்கு பருவமழைக்கு பிறகு, இச்சாகுபடி பணிகள், ஆக., மாதத்தில் மேற்கொள்ளப்படும்.இதற்காக, கோடை காலத்தில், கோடை உழவையும், பருவமழைக்கு பிறகு உழவும் செய்து, விளைநிலத்தை, தயார் செய்கின்றனர்.இதனால், களைகள் கட்டுப்படுவதுடன், மழைக்காலத்தில், பெறப்படும் தண்ணீரால், மண் வளம் பெறுகிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, கொண்டைக்கடலை, கொத்தமல்லிக்கு போதிய விலை கிடைக்காமல், தொடர் பாதிப்பு ஏற்படுகிறது.விவசாயிகள் கூறியதாவது:மானாவாரி சாகுபடியில், ஆண்டுதோறும், விளைச்சலும் குறைந்து, விலையும் கிடைப்பதில்லை. சில சீசன்களில், சாகுபடிக்கு செலவிட்ட தொகை கூட கிடைக்காமல், நஷ்டமடைந்துள்ளோம். கரிசல் மண்ணில், மாற்றுச்சாகுபடி செய்யவும் வழியில்லை.எனவே, மானாவாரி சாகுபடி அறுவடையின் போது, கொண்டைக்கடலைக்கு, ஆதார விலை நிர்ணயித்து, அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.இதனால், தானியங்களுக்கு நிலையான விலை கிடைக்கும்; சிறு, குறு விவசாயிகளும், நஷ்டத்திலிருந்து தப்பிக்க முடியும். அதே போல், விதைப்புக்கு தேவையான தானியங்களை சிறப்பு திட்டங்களின் கீழ் மானியத்தில் வழங்க வேண்டும்.கோடை உழவு மானியத்தை அனைத்து கிராமங்களுக்கும் ஒதுக்கீடு செய்தால், உதவியாக இருக்கும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X