பொது செய்தி

தமிழ்நாடு

எச்சில் துப்பினால் அபராதம்? ஊராட்சிகளுக்கு உத்தரவு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

திருப்பூர்:கொரோனா பரவலைத் தடுக்க, பொது இடங்களில், எச்சில் துப்பாமல் தவிர்க்க வேண்டும். இவ்வாறு எச்சில் துப்பினால், அபராதம் விதிக்க, சட்டத்தில் இடம் உள்ளது.இருமல், தும்மல் மட்டுமின்றி, எச்சிலில் உள்ள நீர்த் திவலைகள் மூலமும், கொரோனா தொற்று பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றும் பொதுமக்களில் பலர், பொது இடங்களில், எச்சில் துப்புவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதன் மூலமும், தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக, மருத்துவர்கள் கூறுகின்றனர்.சுகாதாரத்துறையினர் கூறுகையில், ''பொது இடங்களில், எச்சில் துப்புவதை, முற்றிலும் தவிர்க்க வேண்டும். எச்சில் துப்புபவர்கள் கண்டறியப்பட்டால், 500 ரூபாய் அபராதம் விதிக்க, தொற்று நோய் தடுப்புச்சட்டத்தில் இடம் உள்ளது.தேவைப்பட்டால், அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள், இச்சட்டத்தைப் பயன்படுத்தலாம்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X