பொது செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி- திண்டுக்கல் நான்கு வழிச்சாலை ஆரம்ப கட்ட பணி!உடுமலை புறநகர பகுதியில் வழித்தடம் அமைப்பு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
உடுமலை;பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணியில், நிலம் எடுப்பு, மரங்கள் அகற்றம், மண் கொட்டுதல் என ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது.மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தில், பொள்ளாச்சி - திண்டுக்கல் கமலாபுரத்தை இணைக்கும் வகையில், நான்கு வழிச்சாலை திட்டம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.மத்திய அரசு, 40 சதவீதம், தனியார், 60 சதவீதம் என்ற
  பொள்ளாச்சி- திண்டுக்கல் நான்கு வழிச்சாலை ஆரம்ப கட்ட பணி!உடுமலை புறநகர பகுதியில் வழித்தடம் அமைப்பு

உடுமலை;பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணியில், நிலம் எடுப்பு, மரங்கள் அகற்றம், மண் கொட்டுதல் என ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது.மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தில், பொள்ளாச்சி - திண்டுக்கல் கமலாபுரத்தை இணைக்கும் வகையில், நான்கு வழிச்சாலை திட்டம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.மத்திய அரசு, 40 சதவீதம், தனியார், 60 சதவீதம் என்ற அடிப்படையில், 3,649 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரோடு அமைக்கப்படுகிறது.பொள்ளாச்சி - மடத்துக்குளம் 50.07 கி.மீ.,; மடத்துக்குளம்- ஒட்டன்சத்திரம், 45.38 கி.மீ.,; ஒட்டன்சத்திரம் - கமலாபுரம் 36.51 கி.மீ., என, 131.96 கி.மீ., ரோடு அமைகிறது. இதில், 106.693 கி.மீ., (80 சதவீதம்) புறவழிச்சாலையாக அமைகிறது.பழநி சண்முகநதி, அமராவதி ஆறுகளின் குறுக்கே உயர் மட்ட பாலங்கள், இரண்டு ரயில்வே பாலங்கள், 46 சிறு பாலங்கள், 490 மிகச்சிறு பாலங்கள் அமைக்கப்படுகின்றன. மேலும், சாலையை கடந்து, விளைநிலங்களுக்கு பாசன குழாய் கொண்டு செல்ல, ஒவ்வொரு, 250 மீ., இடைவெளியிலும், 600 மி.மீ., விட்டத்தில், குழாய்கள் அமைக்கப்படுகிறது. 47 கி.மீ.,க்கு அணுகுசாலை, 146 பஸ் ஸ்டாப்கள், நான்கு கனரக வாகன ஓய்விடங்கள் அமைக்கப்படுகின்றன.இத்திட்டத்திற்காக, மடத்துக்குளம் - பொள்ளாச்சி வரை, தனியார் நிலங்கள், விவசாய நிலங்கள் என, 323 ெஹக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.உடுமலை தாலுகா பகுதியில், நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டதால், தற்போது இப்பகுதிகளில் ரோடு பணிகள் துவங்கியுள்ளன.தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:உடுமலை பகுதிகளில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. அதனால், அப்பகுதியில், உள்ள மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள், குடிநீர் குழாய்கள், மரங்கள் அகற்றுதல், கட்டுமான பொருட்கள் தயாரிப்பு, சேகரிப்பு மற்றும் தரப்பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது.இரண்டாம் கட்ட பணியான கட்டுமான பணி, அடுத்த மாதம் துவங்கும். இதில், சாலை அமைத்தல், பாலங்கள் கட்டுமான பணி மேற்கொள்ளப்படும். இரு ஆண்டுகளில் நான்கு வழிச்சாலை பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X