பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் தண்டவாள 'பேக்கிங்' பணி

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
 ரயில் தண்டவாள 'பேக்கிங்' பணி

கிணத்துக்கடவு:கோவை, போத்தனுார் - பொள்ளாச்சி வரையுள்ள ரயில்வே தண்டவாளத்தில் கடந்த நான்கு மாதங்களாக ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ரயிலின் வேகத்தை அதிகரிக்க, தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் இறுக்கமாக இருக்க வேண்டும். இதற்காக, ரயில்வே துறையினர் கடந்த மாதம், தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் கொட்டி பி.ஆர்.எம்., பேக்கிங் மெஷினில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. விடப்பட்ட எட்டு கி.மீ., துாரத்திற்கு ஜல்லி கற்கள் கொட்டும் பணி நேற்று முன் தினம் துவங்கியது.இதற்காக, 40 டன் எடையுள்ள ஜல்லி கற்கள், 15 ரயில் பெட்டிகளில் கொண்டு வரப்பட்டு, பொள்ளாச்சியில் இருந்து ரயில் கிணத்துக்கடவு வரை விடுபட்ட பகுதிகளில், தண்டவாளத்தின் இரண்டு பக்கங்களில் கொட்டப்பட்டது.தினமும் இரண்டு கி.மீ., துாரத்திற்கு மட்டுமே ஜல்லி கற்கள் கொட்டப்படுவதால், நேற்று, கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் வரை தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளது.இப்பணிகள் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நடக்கும். இதையடுத்து, தண்டவாளத்தின் இரண்டு பக்கங்களிலும் ஜல்லி கற்கள் சமப்படுத்தப்பட்டு, பி.ஆர்.எம்., பேக்கிங் மெஷினில், இறுக்கம் செய்யும் பணி துவங்கும் என ரயில்வேத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X