வாழ்வாதாரம் இழந்த வட மாநில தொழிலாளி: தினமலர் செய்தியால் உதவிக்கரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாழ்வாதாரம் இழந்த வட மாநில தொழிலாளி: 'தினமலர்' செய்தியால் உதவிக்கரம்

Added : ஜூலை 28, 2020
Share
 வாழ்வாதாரம் இழந்த வட மாநில தொழிலாளி: 'தினமலர்' செய்தியால் உதவிக்கரம்

அவிநாசி:அவிநாசி அருகே அணைப்புதுார் பகுதியில் வசிப்பவர் சுராஜ் பஸ்வான், 25. புலம்பெயர்ந்து வந்த பீகார் மாநில தொழிலாளி.இவரது மனைவி அஞ்சலி குமாரி, 20. சமீபத்தில் தனது வீட்டில் நடந்த தீ விபத்தில் பலியானார். அவரை காப்பாற்ற சென்ற சுராஜ்க்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.இரு குழந்தைகள் உள்ள நிலையில், செய்வதறியாது திகைத்த அவரை, தன்னார்வலர்கள் சிலர், திருமுருகன் பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.வழியின்றி தவித்த அவர் தொடர்பான செய்தி, 'தினமலர்' நாளிதழில் வெளியானது. அதன் எதிரொலியாக, தன்னார்வலர்கள் பலர், நிதியுதவி அளித்து வருகின்றனர்.தொடர்ச்சியாக, 'ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் காந்திநகர்' சார்பில், சுராஜின் மருத்துவ சிகிச்சைக்கு, 40 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கினர். ரோட்டரி தலைவர் குணசேகரன், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் நித்யானந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X