பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தி: விவசாயிகளுக்கு கலெக்டர் 'அட்வைஸ்'

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

திருப்பூர்:தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் வழங்கப்படும் மானியத்தை பெற்று, சிறுதானியம் உற்பத்தி செய்ய, விவசாயிகள் முன்வர வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், நெல், சிறுதானியம் மற்றும் பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்கள், 2.38 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது.சிறுதானிய தொகுப்பு செயல்விளக்க திடல் அமைக்க, அவிநாசியில், 70 எக்டர்; திருப்பூர்மற்றும் ஊத்துக்குளியில் தலா, 50 எக்டருக்கு, தலா, 6,000 ரூபாய்; மடத்துக்குளம் மற்றும் உடுமலையில், தலா, 25 ஏக்கரில் கம்பு, உடுமலையில் மட்டும், 25 ஏக்கரில் சாமை செயல்விளக்க திடல் அமைக்க, தலா, 6,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.கிலோவுக்கு, 100 ரூபாய் மானியத்துடன், வீரிய ஒட்டுரக சோளம் விதை, 15 குவிண்டால்; கம்பு, 10 குவிண்டால் வழங்கப்படும். உயர் விளைச்சல் ரக சோளம், 30 ரூபாய் மானியத்துடன், 100 குவிண்டால், கம்பு, 20 குவிண்டாலுக்கு மானியம் கிடைக்கும்.உயர் விளைச்சல் ரக சோளம் விதை உற்பத்திக்கு, 230 குவிண்டாலுக்கும், 40 குவிண்டால் கம்பு விதைக்கு, கிலோவுக்கு, 30 ரூபாய் மானியம் கிடைக்கும்.இத்துடன், நுண்ணுாட்டச்சத்து, உயிர் உரங்கள், பூச்சி மருந்து, களை கொல்லி ஆகியவை, 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். கை தெளிப்பானுக்கும், 50 சதவீதம் வரை மானியம் கிடைக்கும். கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறுகையில், ''கம்பு, ராகி, சோளம், வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை, அன்றாட உணவில் பயன்படுத்த வேண்டும்.அரிசி உணவு பொருட்களுடன், பயறு வகைகள் சேர்ப்பதும் அவசியம். ஊட்டச்சத்து சிறுதானிய பயிர்களின் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க, தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.பலநிலையில் மானியம் பெற்று, சிறுதானிய உற்பத்தி செய்ய, விவசாயிகள் முன்வர வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X