பொது செய்தி

தமிழ்நாடு

குணமடைந்த, 10 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரியில், கொரோனா சிகிச்சையில் குணமடைந்து, 10 பேர் வீடு திரும்பினர்.திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் அனுமதிக்கப்படுகின்றனர். நேற்றுமுன்தினம் வரை, 131 நபர்கள் சிகிச்சையில் இருந்தனர்.நேற்று, 10 நபர்கள், குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நேற்று, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 29 நபர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அதன்படி, கொரோனா சிகிச்சை வார்டில், 150 நபர்கள் உள்ளனர்.பி.சி.ஆர்., பரிசோதனை மையத்தில், 74 நபர்கள், சளி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். கொரோனா தொற்று சந்தேகத்தில், தனிமைப்படுத்தப்பட்டு வார்டில், 18 பேர் உள்ளனர்.இந்நிலையில், கோல் டன் நகர், ராஜமாதா வீதியைச் சேர்ந்த 65 வயது ஆண், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்றுமுன்தினம் மதியம் அனுமதிக்கப்பட்டார்.அவர், ஏற்கனவே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தமையால், இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X