பொது செய்தி

தமிழ்நாடு

பழைய பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பு பணிகள் தீவிரம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
 பழைய பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பு பணிகள் தீவிரம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில், ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி பராமரிப்பு பணிகளை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.பொள்ளாச்சி நகரில், புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டுகள் உள்ளன. அதில், பழைய பஸ் ஸ்டாண்டில் திருப்பூர், பழநி, கோவை உள்ளிட்ட புறநகர்களுக்கு செல்லும் பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் ஸ்டாண்டில் போதுமான குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும்; சேதமடைந்த பஸ் ரேக்குகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போக்குவரத்து இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பஸ் இயக்கம் இல்லாத நிலையில், பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பு பணிகளை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், பஸ் நிறுத்தப்பகுதியில் உள்ள ரேக்குகள் சீரமைக்கப்பட்டு பெயின்ட் அடிக்கும் பணிகள் நடக்கிறது. மேலும், பஸ் நிறுத்தப்பகுதியில் வரிசை எண், இருக்கை எண் உள்ளிட்டவை குறிப்பிடப்படும். ஓய்வு அறையில் போதுமான குடிநீர் வசதி, மின்விளக்கு, மின்விசிறி வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.பெண்கள் தாய்ப்பால் ஊட்டும் அறையில் குடிநீர் வசதி மேம்படுத்தப்படுகிறது. பஸ் ஸ்டாண்டில் கூடுதலாக மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X