பொது செய்தி

தமிழ்நாடு

இருளில் மூழ்கும் பழங்குடியின மாணவர்களின் எதிர்காலம்

Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 இருளில் மூழ்கும் பழங்குடியின மாணவர்களின் எதிர்காலம்

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள பழங்குடியின கிராமங்களில் மின் வசதி இல்லாததால், மாணவர்களின் வாழ்க்கையும், கல்வியும் இருளில் உள்ளது.ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில், 17 பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இதில், ஆழியாறு சின்னாறுபதி, எல்.எப்., காலனி, பந்தக்காலம்மன் பதி, சர்க்கார்பதி, நாகரூத்து, கோழிகமுத்தி, டாப்சிலிப் என, பல பழங்குடியின கிராமங்களில் மின் வசதி இல்லை.இப்பகுதிகளிலுள்ள மாணவர்கள், சோலார் விளக்கு, கெரசின் விளக்கு, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்து முன்னேறி வருகின்றனர்.இந்நிலையில், தமிழக அரசு சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான புத்தகங்கள் வழங்கியது. அரசுப்பள்ளிகளில் 'ஸ்மார்ட் போன்' வாயிலாக 'ஆன்லைன்' முறையிலும், தொலைக்காட்சி 'சேனல்' வாயிலாகவும் கல்வி கற்பித்து வருகின்றனர்.இந்நிலையில், வீடுகளுக்கு மின் இணைப்பே இல்லாமல் இருளில் உள்ள பழங்குடி மாணவர்கள், 'ஸ்மார்ட் போன்' வாங்க வசதியும் இல்லாமல், கல்வி கற்க முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.பள்ளி கல்வித்துறை, பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை என அனைத்து அரசு துறைகளும் ஒன்றிணைந்து, பிரச்னைக்கு தீர்வு கண்டு பழங்குடி மாணவர்கள் கல்வி கற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.ஆழியாறு எல்.எப்., காலனி பழங்குடியின மாணவர்கள் கூறுகையில், 'இப்பகுதியில் இருந்து, ஆறு மாணவர்கள், ஆழியாறு அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கிறோம். வீடுகளில் மின் வசதி இல்லை, 'ஸ்மார்ட் போன்' வாங்கும் அளவுக்கு பெற்றோரிடம் வருமானமும் இல்லை.'ஆசிரியர் நடத்தும் பாடங்களை கேட்க வழியின்றி, நாங்களே புத்தகத்தை படித்து கற்றுக்கொள்கிறோம். ஆனால், ஆசிரியர் வழிகாட்டுதல் இல்லாததால் பல பாடங்களை கற்க முடியவில்லை,' என்றனர்.மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட தலைவர் பரமசிவம் கூறியதாவது:தேசிய புலிகள் ஆணையத்தின் உத்தரவுப்படி, வனப்பகுதியிலுள்ள பழங்குடியினர் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க முடியாது என, வனத்துறையினர் கூறுகின்றனர்.புலிகள் காப்பக வனத்திலுள்ள நவமலை, சர்க்கார்பதி, நாகரூத்து உள்பட பல்வேறு பழங்குடியின கிராமங்களுக்கு அருகில், மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.அங்குள்ள அலுவலர்களுக்கு குடியிருப்புக்கு மின்வசதி உள்ளது. இந்த குடியிருப்புகளில் இருந்து, 100 மீ., தொலைவிலுள்ள பழங்குடி கிராமங்களுக்கு மின் இணைப்பு இல்லை என்பது வேடிக்கையாக உள்ளது. சில கிராமங்களில் தெருவிளக்கு வசதி உள்ளது. ஆனால் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை.ஆனால், வனத்திலுள்ள தனியார் பட்டா நிலங்கள், 'ரிசார்ட்'களுக்கு மின் வசதி உள்ளது. பழங்குடியின மக்களின் வீடுகளுக்கு, அரசு மின் இணைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, பரமசிவம் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூலை-202008:09:01 IST Report Abuse
ஆப்பு ...புதிய கல்வித்திட்டம் வருது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X