பொது செய்தி

தமிழ்நாடு

'ஜன் தன்' கணக்கு துவங்க பயனாளிகளுக்கு 'அட்வைஸ்'

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி,:பொள்ளாச்சியில், வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள், வங்கிகளில் 'ஜன் தன்' சேமிப்பு கணக்கு துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.டிஜிட்டல் இந்தியா திட்டத்தில், வங்கிகளில், ஏழை மக்களுக்கான 'ஜன் தன்' சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிராமங்களில் தேசிய வேலை உறுதியளிப்பு திட்டப்பயனாளிகளுக்கு, அதற்கான அடையாள அட்டை வாயிலாக, வங்கிகளில், 'ஜன் தன்' கணக்கு துவங்க அறிவிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி ஒன்றியங்களில் வேலை உறுதி திட்ட பயனாளிளுக்கு, வங்கிக்கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படுகிறது. குறைந்த பட்ச இருப்பு வைக்க பயனாளிகள் சிரமப்படுகின்றனர். இருப்பு குறைந்தால், அபராதம் செலுத்த நேர்கிறது. இதை தவிர்க்க, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டையுடன் வேலை உறுதியளிப்பு திட்ட அடையாள அட்டையும் கொண்டு சென்று, அருகில் உள்ள வங்கியில் 'ஜன் தன்' கணக்கு துவங்கி பயனடையலாம்.மேலும், 'ஜன் தன்' வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களுக்கு, தமிழகத்தில், 18004254415 என்ற இலவச எண்ணுக்கு அழைத்து தகவல்கள் பெறலாம், என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X