பொது செய்தி

தமிழ்நாடு

படகு இல்லம் தடை நீங்கியது பேச்சுவார்த்தையில் உடன்பாடு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
 படகு இல்லம் தடை நீங்கியது பேச்சுவார்த்தையில் உடன்பாடு

வால்பாறை:படகு இல்லம் அமைக்கும் பணிக்கு தடைவிதித்த தனியார் எஸ்டேட் நிர்வாகத்தை கண்டித்து, வால்பாறையில் பல்வேறு அமைப்புக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.வால்பாறை நகரில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், நகராட்சி சார்பில், 2.5 கோடி மதிப்பீட்டில், 4.25 ஏக்கர் பரப்பில் படகுஇல்லம் அமைக்கும் பணி, கடந்த இரண்டு மாதங்களாக நடக்கிறது.இந்நிலையில், தனியார் எஸ்டேட் நிர்வாகம் சம்மந்தப்பட்ட இடத்தின் ஒரு பகுதி எஸ்டேட் நிர்வாகத்திற்கு தான் சேரும் எனக்கூறி, பணி செய்ய தடை விதித்தனர்.இதனை கண்டித்து, வால்பாறை வியாபாரிகள், சுற்றுலா ஆர்வலர்கள், பொதுமக்கள் திரண்டு, தனியார் எஸ்டேட் நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்துக்கு, வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஜெபராஜ் தலைமை வகித்தார். பொதுசெயலாளர் ஷாஜூஜார்ஜ், பொருளாளர் ஜேசுதாஸ் உட்பட பல்வேறு அமைப்புக்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.படகு இல்லம் அமைக்கும் பணிக்கு தனியார் எஸ்டேட் நிர்வாகம் தொடர்ந்து தடையாக இருந்தால், எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் எனவும், ஆர்ப்பாட்டதில் தெரிவித்தனர். இந்நிலையில், படகுஇல்லம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த தனியார் எஸ்டேட் அதிகாரிகளுடன், வால்பாறை நகராட்சி கமிஷனர் பவுன்ராஜ், தொழிற்சங்க தலைவர் அமீது ஆகியோர் பேச்சு நடத்தினர்.பொதுமக்கள் நலன் கருதி, படகு இல்லம் அமைக்க எஸ்டேட் நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இதனையடுத்து, நிறுத்தப்பட்ட பணி மீண்டும் துவங்கியதால், வியாபாரிகள், சுற்றுலா ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X