கேட்பாரற்ற கார்: பொதுமக்கள் அச்சம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கேட்பாரற்ற கார்: பொதுமக்கள் அச்சம்

Added : ஜூலை 28, 2020
Share
 கேட்பாரற்ற கார்: பொதுமக்கள் அச்சம்

பல்லடம்:பல்லடம் அருகே, பல நாட்களாக நிற்கும் கார் குறித்து, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.வடுகபாளையம் அரசு துவக்க பள்ளி அருகே, ஒரு கார் (டிஎன் 01 பிஏ 0767) நீண்ட நாட்களாக அப்பகுதியில் நிற்கிறது. இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.பொதுமக்கள் கூறுகையில், 'இரண்டு வாரங்களுக்கு மேலாக கார் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை பதிவு எண் கொண்ட காரை, யார் எப்போது நிறுத்தினர், என்ற விவரம் தெரியவில்லை,' என்றனர்.இவ்வாறு, பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தி வந்ததன் காரணமாக, அப்பகுதி மக்களே கார் டயர்களின் காற்றை இறக்கி விட்டனர். பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X