சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

புலி: ஆரோக்கியமான உயிரிப்பரவலுக்கு ஆதாரம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
சுயசார்பு இந்தியாவின் சிறந்த உதாரணமாகவும், தீர்மானங்களை உறுதியுடன் இந்தியா நிறைவேற்றி வருவதற்கு அடையாளமாகவும் புலிகள் பாதுகாப்பு திகழ்கிறது. இயற்கையை விரும்பும் நாடான இந்தியா, உலக அளவில் அதிகமான புலிகள் வசிக்கும் இடமாக திகழ்கிறது. உலக அளவில் உள்ள புலிகளில், 70 சதவீதம் அளவுக்கு இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 2,967 புலிகள் உள்ளன. இது நாட்டுக்கும்,
 புலி: ஆரோக்கியமான உயிரிப்பரவலுக்கு ஆதாரம்

சுயசார்பு இந்தியாவின் சிறந்த உதாரணமாகவும், தீர்மானங்களை உறுதியுடன் இந்தியா நிறைவேற்றி வருவதற்கு அடையாளமாகவும் புலிகள் பாதுகாப்பு திகழ்கிறது. இயற்கையை விரும்பும் நாடான இந்தியா, உலக அளவில் அதிகமான புலிகள் வசிக்கும் இடமாக திகழ்கிறது. உலக அளவில் உள்ள புலிகளில், 70 சதவீதம் அளவுக்கு இந்தியாவில் உள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 2,967 புலிகள் உள்ளன. இது நாட்டுக்கும், மக்களுக்கும் வனப் பாதுகாப்பில் மிகப்பெரும் வெற்றியாகத் திகழ்கிறது.தடைஇந்தியாவில் சிறப்பான உயிரிப்பரவலுக்கு ஆதாரமாக இருப்பதுடன், கலாச்சார வளம் கொண்ட நமது நாட்டை, தலைமைப்பண்பை ஏற்க வைக்கிறது. நம்மிடம் உலக அளவிலான நிலப்பகுதியில், 2.5 சதவீதம் மட்டுமே உள்ளது. அவற்றில், 4 சதவீதம் மட்டுமே புதிய மழைநீர் ஆதாரங்கள் கொண்டவை. இவை நமக்கு மிகப்பெரும் தடையாகக் கருதப்படுகிறது.

உலக அளவில் வசிக்கும் மனிதர்கள் மற்றும் கால்நடைகளில் 16 சதவீதம் அளவுக்கு நம் நாட்டில் வசிக்கின்றன. இவற்றுக்கு உணவு, நீர், நிலம் ஆகியவை தேவைப்படுகின்றன. உலகின் உயிரிப் பரவலில் 8 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது.உயிரிப்பரவலில் உலகின் மிகப்பெரும் ஜனநாயகமாக இந்தியா வளர்ந்து வருகிறது. அண்மையில், கடைசியாக இந்தியா மேற்கொண்ட புலிகள் கணக்கெடுப்பு, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இன்று இந்தியாவில், 72,000 சதுர கிலோமீட்டருக்கு மேலான பரப்பளவில் 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன. அவற்றில், 21 காப்பகங்கள், மிகவும் சிறப்பாக செயல்படுவது தெரியவந்துள்ளது. ஊக்குவிப்பதில்லைமேலும் 17 காப்பகங்கள் நன்றாகவும், 12 காப்பகங்கள் சராசரியாகவும் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் மத்திய பகுதிகளில் பாரம்பரியக் குழுக்களின் திட்டமிட்ட வேட்டையாடல் நடவடிக்கைகள், ஆறு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கப்பட்டுள்ளன. நம்மிடம், 500-க்கும் மேற்பட்ட சிங்கங்கள், 3,000 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள், 30,000 யானைகள் உள்ளன. இவை அனைத்தும் வனப்பகுதியில் வசிக்கின்றன. நமது வன விலங்குகளை உள்ளூர்ப் பகுதிகளில் வளர்க்க, நாம் ஊக்குவிப்பதில்லை.

புலிகள் விவகாரத்தில் தலைமை வகித்துவரும் நாம், சிறந்த நடைமுறைகளை சர்வதேச புலிகள் கூட்டமைப்புகள் மூலம் பகிர்ந்துகொள்கிறோம். தீவிரப் பாதுகாப்புதாய்லாந்து, மலேஷியா, பங்களாதேஷ், பூட்டான், கம்போடியா நாடுகளைச் சேர்ந்த கள அதிகாரிகளுக்கு திறன் வளர்ப்புப் பணிமனைகளையும் கூட இந்தியா மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

புலிகளை மறுஅறிமுகம் செய்வது குறித்த அனுபவங்களை கம்போடியா மற்றும் ரஷ்யாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம். புலிகளைக் கொண்டுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள், நமது நாட்டில் உள்ள பல்வேறு புலிகள் காப்பகங்களுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

பெரும்பாலும் புலிகளைக் கொண்டுள்ள, 13 நாடுகளுடனும் பல்வேறு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளோம். புலிகள் இருக்கும் பகுதிகளில் சிறப்பான முறையில் ரோந்து வருவதற்கான வழிமுறைகளுக்கான டிஜிட்டல் இந்தியா திட்டம், புலிகளின் தீவிரப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலவரத்துக்கான கண்காணிப்பு முறை ஆகியவற்றையும் அரசு மேற்கொண்டு உள்ளது.


மிகப்பெரும் இலக்கு


அதிக அளவிலான புலிகள் இருப்பது என்பது, மிக அதிக உயிரிப்பரவல் மற்றும் அதன் அறிவியல்பூர்வ பாதுகாப்புக்கான சான்றுகளாக உள்ளன. வானிலை மாற்றம் போன்ற சவால்களை நாம் எதிர்கொள்ளும்போது, நம் செயல்பாடுகளுக்கான தளமாக, இந்த அதிக உயிரிப்பரவல் இருப்பது அவசியம். 250 கோடி டன் கார்பனை ஈர்க்கும் வகையிலான தளங்களை ஏற்படுத்த, நாம் முடிவு செய்துள்ளோம். இது மிகப்பெரும் இலக்கு.

மிகப்பெரும் புத்தாக்க இலக்குகளை இந்தியா அறிவித்துள்ளது. இன்று, ஒட்டுமொத்த எரிசக்தியில், 37 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக மாற்றி உள்ளது. சூரியசக்தி மற்றும் காற்று ஆதாரங்கள் மூலம் 87 ஜிகாவாட் எரிசக்தி தயாரிக்கப்படுகிறது. உயிரி எரிபொருளில் இயங்கும் பயணியர் ஜெட் விமானங்களை நாம் வழக்கமாக உபயோகித்து வருகிறோம்.

கார்பன் உற்பத்திக்கு ஒரு டன்னுக்கு 6 டாலர் என்ற அளவில், கார்பன் வரியை அரசு விதித்து வருகிறது. பெட்ரோல், டீசல் மீதும் கார்பன் வரி விதிக்கப்படுகிறது. பிஎஸ்-6 தர நிலைக்கு இந்தியா மாறியுள்ளது. தற்போது அனைத்து வாகனங்களும், அனைத்து எரிபொருளும் பிஎஸ்-6 தரநிலையுடன் இருக்க வேண்டும். இது வாகன மாசைக் குறைக்கிறது. வரும், 10 ஆண்டுகளில், 2.6 கோடி ஹெக்டேர் அளவுக்கு நிலத்தை மீட்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

எனவே, பாரிஸ் உடன்பாட்டில் அளித்த வானிலை மாற்ற உறுதிகளின் படி இந்தியா நடைபோட்டு வருகிறது. மேலும், மற்ற பல்வேறு நாடுகளும் சாதிக்காததை விட, அதிக அளவில் செயல்படுத்தி வருகிறது.

இந்த கட்டுரையை எழுதியவர், சுற்றுச்சூழல், வனம், வானிலை மாற்றம்; தகவல் ஒலிபரப்பு; கனரகத் தொழில்கள், பொது நிறுவனங்கள் துறைகளுக்கான மத்திய அமைச்சர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X