பொது செய்தி

தமிழ்நாடு

ரோடு விரிவாக்கப்பணி மின் கம்பங்கள் மாற்றம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை நகராட்சி அலுவலகம் ரோடு விரிவாக்கம் பணிக்காக, மின் கம்பங்கள் அகற்றப்பட்டன.உடுமலை, தளி ரோடு ரயில்வே மேம்பாலத்திலிருந்து, நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளுக்கு செல்லும் பிரதான வழித்தடமாக உள்ளது.குறுகலாக உள்ள இந்த ரோட்டை அகலப்படுத்தி, மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரோடு மற்றும் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்ட நிலையில், இந்த ரோட்டில், உள்ள மின் கம்பங்கள் அகற்றப்படாமல் இருந்தது. இந்த வழித்தடத்தில் வரும் வாகனங்கள் மின் கம்பத்தில் மோதி விபத்துக்கள் ஏற்படும் அபாயமும், ரோடு அகலப்படுத்தியும் பயனில்லாத நிலை இருந்தது.இந்நிலையில், மின் வாரியம் சார்பில், ரோட்டின் மத்தியில் இருந்த மின் கம்பங்கள், ரோட்டோரத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X