கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பழங்குடியின மக்களுக்கு நிவாரணம் அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சென்னை : பழங்குடியின மக்களின் நிலையை ஆய்வு செய்து, நிவாரணம் வழங்கும்படி, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கக்கோரி, உயர் நீதிமன்றத்தில், தேசிய மக்கள் கட்சி தலைவர், எம்.எல்.ரவி, வழக்கு தொடர்ந்திருந்தார்.இம்மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.பழங்குடியின மக்கள் பாதிப்பு குறித்து, ஆங்கில நாளிதழில் வெளிவந்த செய்தியை சுட்டிக்காட்டி, அரசு வழக்கறிஞரிடம், நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இலவச அரிசி, 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கியிருப்பதாக, அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்

.இதையடுத்து, பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு, அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து, அவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.எடுத்த நடவடிக்கை குறித்து, அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை, மூன்று வாரங்களுக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X