பொது செய்தி

தமிழ்நாடு

குணமடைந்தோர் அதிகரிப்பு :58ல் 35 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
 குணமடைந்தோர் அதிகரிப்பு :58ல் 35 பேர் 'டிஸ்சார்ஜ்'

உடுமலை:உடுமலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, 58 பேரில், 35 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். உடுமலை போலீஸ் ஸ்டேஷனில், ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், மூடப்பட்டது.உடுமலை போலீஸ் ஸ்டேஷனில், ரைட்டராக உள்ள, 32 வயது போலீசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, போலீஸ் ஸ்டேஷன் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டு, யாரும் அனுமதிக்கப்படவில்லை. புகார் மனுக்கள், வெளியில் அமைக்கப்பட்டுள்ள, தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பந்தலில் பெறப்பட்டது. இங்கு, பணியிலுள்ள இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் என, 42 பேருக்கு, உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும், வட பூதிநத்தம், 27 வயது பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 மாத கர்ப்பிணியான அவருக்கு, வழக்கமான பரிசோதனையின் போது தெரியவந்தது.அதே போல், பூலாங்கிணர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த, 35 வயது ஆண், கரட்டூரை சேர்ந்த, 26 வயது பெண் என, உடுமலையில் நேற்று நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உடுமலை நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில், நேற்று வரை, 58 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; இருவர் இறந்தனர்.உடுமலை அரசு மருத்துவமனையில், 11 பேர் உட்பட, திருப்பூர் அரசு மருத்துவமனை, கோவை தனியார் மருத்துவமனை என, 21 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X