பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., திரைப்பட கல்லுாரி

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சென்னை : எம்.ஜி.ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில், பட்டப்படிப்பில் சேர, செப்.,1க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலையுடன் இணைக்கப்பட்டு, கல்லுாரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.இங்கு நடப்பு கல்வியாண்டில், இளங்கலை ஒளிப்பதிவு, எண்ணிய இடைநிலை, ஒலிப்பதிவு, இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு, உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் பட்டப்படிப்பில், மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்களை, நாளை முதல் ஆகஸ்ட், 26 வரை, தபாலில் பெறலாம்; www.tn.gov.in என்ற, இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய ஆவணங்களுடன், செப்டம்பர், 1 மாலை, 5:00 மணிக்குள், 'முதல்வர், எம்.ஜி.ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி., வளாகம், தரமணி, சென்னை' என்ற, முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை பெற, மாணவர்கள் நேரடியாக வர வேண்டாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X