சென்னை : தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2.27 லட்சமாக உயர்ந்தாலும், 1.66 லட்சம் பேர் குணமடைந்து, நலமுடன் வீடு திரும்பி உள்ளது, மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று, 4,707 பேர் வீடு திரும்பினர்.இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில், 119 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இந்த ஆய்வகங்களில், நேற்று மட்டும், 61 ஆயிரத்து, 153 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில், 6,972 பேருக்கு, பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில், 1,107; செங்கல்பட்டில், 365; கோவையில், 273; காஞ்சிபுரம், கன்னியாகுமரியில், தலா, 223; மதுரையில், 346; தஞ்சாவூரில், 209 பேரும் பாதிக்கப்பட்டுஉள்ளனர். தேனியில், 283; திருவள்ளூரில், 486; திருவண்ணாமலையில், 268; துாத்துக்குடியில், 381; திருநெல்வேலியில், 387; விருதுநகரில், 577 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
தொற்றை கண்டறிய இதுவரை, 24.75 லட்சம் பேரிடம் நடத்திய பரிசோதனையில், இரண்டு லட்சத்து, 27 ஆயிரத்து, 688 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக, சென்னையில், 96 ஆயிரத்து, 438; செங்கல்பட்டில், 13 ஆயிரத்து, 348; மதுரையில், 10 ஆயிரத்து, 392; திருவள்ளூரில், 12 ஆயிரத்து, 806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா பிடியில் இருந்து நேற்று, 4,707 பேர் மீண்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து, ஒரு லட்சத்து, 66 ஆயிரத்து, 956 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிஉள்ளனர். தற்போது, 57 ஆயிரத்து, 73 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சில தினங்களில் இறந்தவர்களில், திருச்சியை சேர்ந்த, ஐந்து வயது பெண் குழந்தை உட்பட, 88 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில், 2,056; செங்கல்பட்டில், 239; மதுரை மற்றும் திருவள்ளூரில் தலா, 222 பேர் உட்பட, மாநிலம் முழுதும், 3,659 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE