பொது செய்தி

தமிழ்நாடு

சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் : விவசாயிகளுக்கு மானியம் வினியோகம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

உடுமலை:ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்கள் உற்பத்தியை அதிகரிக்க, வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில், நெல், சிறுதானியங்கள், பயறுவகை, பருத்தி, கரும்பு மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள், 96,632 ெஹக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆரோக்கியமான வாழ்வுக்கு அரிசி உணவுடன், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களான, கம்பு, ராகி, சோளம், வரகு, தினை, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட சிறு தானியங்கள் தினமும் உணவில் பயன்படுத்துவது அவசியமாகும்.இந்த ஊட்டச்சத்து மிக்க சிறுதானியப்பயிர்களின் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க, வேளாண்மைத்துறை மூலம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.சோளம் பயிர், முன்னோடி தொகுப்பு செயல்விளக்கத்திடல், அமைக்க ெஹக்டேருக்கு, 6 ஆயிரம் ரூபாய் வீதம், 170 ெஹக்டேருக்கு வழங்கப்படுகிறது.கம்பு பயிருக்கு, மடத்துக்குளம், உடுமலை வட்டாரத்தில், தலா 25 ெஹக்டேர், உடுமலை வட்டாரத்தில், 25 ெஹக்டேர் பரப்பளவில் சாமை செயல்விளக்க திடல் அமைக்க, ெஹக்டேருக்கு, 6 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.வீரிய ஒட்டுரக சோளம், கம்பு, விதைகள், கிலோவுக்கு, 100 ரூபாய் மானியமாக, 25 குவிண்டால் வழங்கப்படுகிறது. உயர் விளைச்சல் ரக சோளம் விதை, கிலோவுக்கு, 30 ரூபாய் வீதம், 100 குவிண்டால், கம்பு, 20 குவிண்டால் வினியோகம் செய்யப்படுகிறது.மேலும், நுண்ணுாட்டச்சத்துக்கள், உயிர் உரங்கள், பூச்சி மருந்துகள், களைக்கொல்லிகள், கையினால் இயக்கக்கூடிய தெளிப்பான்கள் ஆகியவையும் மானியத்தில் வழங்கப்படுகிறது.ஊட்டச்சத்து மிக்க சிறுதானிய உற்பத்தி தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் மானிய உதவிகள் பெற வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X