கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்தால் நிவாரண உதவி

Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : 'தொழிலாளர் நல வாரியத்தில் உடனே பதிவு செய்தால், அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வழக்கு : தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்யாதவர்களுக்கும், உறுப்பினர் அட்டையை புதுப்பிக்காதவர்களுக்கும் நிவாரணம் வழங்க கோரி, உயர் நீதிமன்றத்தில், ஆட்டோ ஓட்டுனர் சங்கம், கட்டுமான தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட, பல சங்கங்கள் வழக்கு தொடுத்தன. இம்மனுக்கள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தன. அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி கூறியதாவது:வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கு, 2,000 ரூபாய் வழங்கப்பட்டது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு, முழு ஊரடங்கு காரணமாக, ஜூன் மாதமும் வழங்கப்பட்டது.ஊரடங்கு காலத்தில், கட்டுமான தொழிலாளர் நல வாரிய நிதியில் இருந்து, 343 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. வாரியங்களில் பதிவு செய்யாமல், ஒன்றரை கோடி தொழிலாளர்கள் இருப்பர் என, அரசு கருதுகிறது. பதிவு செய்யாதவர்கள், 'ஆன்லைன்' வழியாக, உடனே பதிவு செய்யலாம். உத்தரவுஅவர்களுக்கு, அடுத்த மாதத்தில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்படும். நிதி நெருக்கடி இருந்த போதும், தொழிலாளர்களுக்கும், அனைத்து தரப்பினருக்கும், அரசு நிவாரணம் வழங்குகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.இதையடுத்து, விசாரணையை, வரும், 30க்கு தள்ளி வைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
29-ஜூலை-202009:10:43 IST Report Abuse
Ramachandran Rajagopal லஞ்சம் கொடுத்து பதிவு செய்துகொண்ட கட்டுமான பணியாளர் அல்லாதவர்களுக்கெல்லாம் நிவாரணம் மற்றும் தொழிலாளர்நல வாரியம் அளிக்கும் சலுகைகளை பெறுகின்றனர்.உண்மையில் கட்டுமான பணியாளர்களுக்கு ஒரு சலுகையும் இல்லை அவர்கள் லஞ்சம் கொடுத்து பதிவு செய்யாததால்.லஞ்சம் கொடுப்போருக்கு மட்டுமே அரசு ஊழியர்கள் சேவை செய்கின்றனர் இந்த நாட்டில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X