இந்தியா

கொரோனா பாதிப்பு 'மாஜி' எம்.எல்.ஏ., மரணம்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

புதுச்சேரி : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, என்.ஆர். காங்., கட்சியை சேர்ந்த முன்னாள், எம்.எல்.ஏ., பாலன் நேற்று உயிரிழந்தார்.

புதுச்சேரியைச் சேர்ந்தவர் பாலன், 68; என்.ஆர்.காங்., கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான இவருக்கு காய்ச்சல் மற்றும் சளி ஏற்பட்டது. பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது, கடந்த, 23ல், உறுதி செய்யப்பட்டது.அவர், மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை, 3:20 மணிக்கு இறந்தார். பாலன் ஏற்கனவே சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார்.

அவரது உடல் நேற்று பகல், 2:00 மணிக்கு, கருவடிக்குப்பம் மின் தகன மையத்தில், குடும்பத்தினர் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது. பாலனுக்கு, மனைவி, மகன், மகள் உள்ளனர்.பாலன் மறைவிற்கு, முதல்வர் நாராயணசாமி, தமிழக முதல்வர், இ.பி.எஸ், துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X