கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கடத்தல்காரர்களுடன் போலீசாருக்கு தொடர்பு: உயர் நீதிமன்றம் வேதனை

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

சென்னை : 'போதை பொருள் கடத்துபவர்களுடன், போலீசாரும் கை கோர்ப்பதாக வரும் தகவல் கவலை அளிக்கிறது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

போதை பொருள் கடத்தல் வழக்கில், வேலுார் மாவட்டத்தை சேர்ந்த, விஜயகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார். பின், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், காவலில் வைக்கப்பட்டார். இதற்கான உத்தரவை, கலெக்டர் பிறப்பித்தார். அதை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் விஜயகுமாரின் மனைவி மனு தாக்கல் செய்தார்.மனு, நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக, பல்வேறு கேள்விகளை, நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க, அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.அப்போது, 'போதைப் பொருள் கடத்துபவர்களுடன், போலீசார் கை கோர்ப்பதாக வரும் தகவல் கவலை அளிக்கிறது. இந்தப் பிரிவில் ஓராண்டு பணிபுரிந்தால், சகல வசதிகளுடன், செட்டிலாகி விடலாம் என, கூறுகின்றனரே... அது உண்மையா... வேலியே பயிரை மேயலாமா' என, நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.பின், வழக்கு விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X