சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் கொலை வாலிபருக்கு வலை

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி : காவேரிப்பட்டணம் அருகே, பெண்ணை கொன்ற வாலிபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், காட்டுக்கொல்லை பூசாரி கொட்டகையைச் சேர்ந்த செல்வம் மனைவி துளசி, 55; நேற்று அதே பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில், கால்நடைகளுக்கு தீவனம் சேகரித்து கொண்டிருந்தார்.அப்போது, அங்கு வந்த முத்துவேல், 28, துளசியின் கழுத்து, கை, முகம் உள்பட பல இடங்களில், கத்தியால் வெட்டி, ஓட்டம் பிடித்தார். இதில், துளசி சம்பவ இடத்தில் பலியானார். நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.

சொத்து தொடர்பாக, தன் பெற்றோரிடம் முத்துவேல் தகராறு செய்து வந்தார். 2018ல், சொத்தை பிரித்து தரக் கூறி, தாய் கவுரியை கொலை செய்தார். அந்த வழக்கில் கைதாகி, ஜாமினில் வந்துள்ளார். இதற்கிடையே, அந்த சொத்தை, முத்துவேலின் தந்தை சரவணன், செல்வத்துக்கு விற்றுள்ளார். தனக்குரிய சொத்தை வாங்கியதால் ஆத்திரமடைந்த முத்துவேல், செல்வத்தின் மனைவி துளசியை வெட்டி கொன்றது தெரிந்தது. முத்துவேலை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X