திருச்சி எஸ்.ஐ., தொற்றுக்கு பலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருச்சி எஸ்.ஐ., தொற்றுக்கு பலி

Added : ஜூலை 29, 2020
Share

திருச்சி : திருச்சியில் கொரோனாவுக்கு பலியான, எஸ்.ஐ., உடல், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தவர் சன்னாசி, 57. கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், இரு நாட்களுக்கு முன், திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று காலை உயிரிழந்தார்.

மருத்துவமனையில் இருந்து, அவரது உடல், திருச்சி ஓயாமரி சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, சன்னாசி உடலுக்கு, திருச்சி போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.பின், அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X