பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று பாதித்தோர் சாலையில் உலா: சுகாதாரத்துறையினர் போலீசில் புகார்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், தொற்று உறுதியான நகராட்சி ஊழியர்கள், மூன்று பேர், அரசு மருத்துவமனைக்கு நடந்து சென்றனர். அவர்கள் மீது, சுகாதாரத்துறை அதிகாரிகள், போலீசில் புகார் கொடுத்தனர்.பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் உள்பட மொத்தம், 14 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும், குடிநீர் வழங்கல் பகுதியில் பணிபுரியும் வரையாளர் உள்பட மூன்று பேருக்கு தொற்று உறுதியானது. மூன்று பேருக்கும் சுகாதாரத்துறையினர் தகவல் கொடுத்தனர்.இந்நிலையில், மூன்று பேரும், 108 ஆம்புலன்ஸ் வரவில்லை என கூறி, வெங்கடேசா காலனியிலுள்ள வாட்டர் டேங்கில் இருந்து, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு நடந்து சென்றனர்.தொற்று உறுதியான மூன்று பேர் நடந்து சென்ற தகவல்கள் வேகமாக பரவியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.இது குறித்து, சப் - கலெக்டர் வைத்திநாதன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்தது. சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், தொற்று உறுதியானவர்கள் பொது இடம், சாலையில் நடந்து சென்றது தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக, கொரோனா நோய் தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் விஜயகுமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில், கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களின் வீடு, உடுமலை கரட்டூர், பொன்னாபுரம் மற்றும் கோவையில் உள்ளது. அவர்களின் மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, தொற்று உறுதியாகியுள்ள தகவல் தெரிவித்ததுடன், இருப்பிடத்தில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.மேலும், 108 ஆம்புலன்சில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவர்களாகவே வெங்கடேசா காலனியில் குடிநீர் சேமிப்பு நிலையத்துக்கு வந்து, வாகன வசதி ஏற்படுத்தவில்லை என கூறி சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பியுள்ளனர்.மேலும், பொது சுகாதார விதிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை விதிக்கு புறம்பாக நடந்து கொண்ட மூவர் மீதும் கிழக்கு போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X