கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விவசாயி பிரேத பரிசோதனை அறிக்கை அளிக்க உத்தரவு

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

மதுரை : 'வனத்துறை விசாரணையில், மரணம் அடைந்த விவசாயியின் பிரேத பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி வாகைக்குளத்தைச் சேர்ந்த பாலம்மாள் தாக்கல் செய்த மனு:என் கணவர் அணைக்கரை முத்துவை, சில தினங்களுக்கு முன், கடையம் வனச்சரக அலுவலர்கள் விசாரணை என்ற பெயரில், சிவசைலம் அழைத்துச் சென்றனர். என் மகன் அங்கு சென்றபோது, ஆற்றுப்பாலம் அருகே கணவரை கொண்டு வந்தனர்.அவர் மயங்கிய நிலையில் இருந்தார். தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்கு, என் கணவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்தனர். வனத்துறை அலுவலர்கள் தாக்கியதில், என் கணவர் இறந்துள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.நீதிபதி, ஆர்.பொங்கியப்பன் நேற்று விசாரித்து, ''பிரேத பரிசோதனை அறிக்கை, அதன் வீடியோ பதிவு மற்றும் விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை, போலீசார் இன்று தாக்கல் செய்ய வேண்டும்,'' என்றார்.அணைக்கரை முத்துவின் உடல், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி, அவரது உடலை, நேற்று ஆறாவது நாளாக, உறவினர்கள் வாங்க மறுத்து விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X