பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று: அச்சம் வேண்டாம்! விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுரை

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 29, 2020
Share
Advertisement
 கொரோனா தொற்று: அச்சம் வேண்டாம்! விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுரை

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

பொது இடங்களில், சமூக இடைவெளி பின்பற்றுவதுடன், முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.பொள்ளாச்சி நகராட்சியில், கபீர்தாஸ் வீதியில் உள்ள 65 வயது முதியவருக்கு நேற்று தொற்று உறுதியானது. தொற்று உறுதி செய்யப்பட்ட, 33 வயது நகராட்சி பெண் ஊழியர் வீடு, நஞ்சேகவுண்டன்புதுார் முத்து நகரில் உள்ளது.

ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி நிர்வாகத்தினர், அப்பகுதியில், தடுப்பு அமைத்து தனிமைப் படுத்தி கிருமிநாசினி தெளித்தனர். அதே போல், தொற்று உறுதியான, 55 வயது நகராட்சி எலெக்ட்ரீசியன், மாக்கினாம்பட்டி வடிவு நகரில் வசித்து வருகிறார். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கஞ்சம்பட்டி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில், தனியார் நகைக்கடையில் ஆத்துப்பொள்ளாச்சியை சேர்ந்த, 31 வயதானவர் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். காய்ச்சல், தொண்டை வலியால் அவதிப்பட்டவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தங்கியிருந்த பகுதியை தனிமைப்படுத்தி, 71 பேருக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது.அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனா தொற்று பாதிப்பினை கட்டுப்படுத்த பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பொது இடங்களில் வெளியே வரும்போது, சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

முகக்கவசம் அணியாமல் வெளியே வர வேண்டாம். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். நோய் தொற்றினை கட்டுப்படுத்த அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும். வீண் அச்சம் கொள்ளாமல், அதே நேரத்தில் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

வால்பாறை : வால்பாறை அடுத்துள்ளது சோலையாறு மூன்றாம் டிவிஷன் பகுதியை சேர்ந்த, 25 வயது கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, நேற்று முன் தினம் சுகாதாரத்துறையினர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.நகராட்சி சார்பில், அங்குள்ள வீடு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கர்ப்பிணி வசித்த வீடு மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த, 12 குடும்பங்களை சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.

தனிமைப்படுத்திய வீடுகளில் வசிப்பவர்கள், 21 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். அனைவரிடமும் சளி மாதிரி சேகரித்து, பரிசோதனைக்கு அனுப்பப்படும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X