பொது செய்தி

தமிழ்நாடு

உலக புலிகள் தின போட்டி: படைப்புகளை அனுப்ப வசதி

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:உலக புலிகள் தின போட்டிகளுக்கு, இணையதளம் வழியாக படைப்புகளை இன்று (29ம் தேதி) மாலைக்குள் அனுப்ப வேண்டும், என, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பொள்ளாச்சி கோட்டத்துக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு இன்று (29ம் தேதி) உலக புலிகள் தினத்தையொட்டி போட்டிகள் நடத்தப்படுகின்றன. கட்டுரை, பேச்சு, கவிதை, முகச்சாயம் பூசுதல், கைவினை பொருட்கள் போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, உணவு சங்கிலியில் புலிகளின் முக்கியத்துவம், புலியும், வாழ்விடமும் என்ற தலைப்பில் ஓவியப்போட்டியும்; ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காடும், காடு காக்கும் புலியும் என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும் நடக்கிறது.ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, வரிப்புலி அல்லது வேங்கை என்ற தலைப்பில், முகச்சாயம் பூசுதல், கைவினை பொருட்கள் தயாரிப்பு போட்டிகள் நடத்தப்படுகிறது.ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, புலி பாதுகாப்பில் நவீன உலகின் பங்கு என்ற தலைப்பில் பேச்சு போட்டி; புலிக்காட்டு இதிகாசம், கானகம் போற்றுதல் என்ற தலைப்பில், கவிதை போட்டியும் நடத்தப்படுகிறது.போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் தங்களது படைப்புகளை மொபைல்போன்கள் வாயிலாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து, atrpollachitechnicalteam@gmail.com என்ற இணையதள முகவரிக்கு, இன்று மாலை, 6:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.இத்தகவலை, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X