கலெக்டர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை

Added : ஜூலை 29, 2020
Share
 கலெக்டர்களுடன் இன்று  முதல்வர் ஆலோசனை

சென்னை : ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், முதல்வர் இ.பி.எஸ்., இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகம் முழுதும், வரும், 31ம் தேதி வரை, பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் வாழ்வாதாரம் கருதி, பல்வேறு தளர்வுகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும், பஸ் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து எதுவும் அனுமதிக்கப்படவில்லை. நகர்ப்புறங்களில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படவில்லை. வணிக வளாகங்கள், திரையரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலா தலங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. அரசு அலுவலகங்களில், 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே, பணியாற்ற அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, அனுமதி அளிக்கப்படவில்லை.இதன் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உளளது.பஸ், ரயில் போக்குவரத்து எப்போது அனுமதிக்கப்படும்; ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும்; இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்ற, எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.ஆனால், சென்னையில், கொரோனா பரவல் குறைந்திருந்தாலும், மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இது, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.எனவே, மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்த்தப்படுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, இன்று காலை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, முதல்வர் இ.பி.எஸ்., அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், ஆலோசனை நடத்த உள்ளார்.அப்போது, ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்த லாமா என, கருத்துகளை கேட்க உள்ளார்.நாளை, மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.அதன்பின், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்த்தப்படுமா என்பது தொடர்பான அறிவிப்பை, முதல்வர் வெளியிடுவார் என, தெரிகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X