சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறைச்சிக்காக திருடி கொடூரமாக கொல்லப்படும் பசு மாடுகள்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

சோழவரம் : இறைச்சிக்காக வீடு மற்றும் பண்ணைகளில் வளர்க்கப்படும் மாடுகளை திருடி, கொடூரமாக கொன்று குவிக்கும் சமூக விரோதிகள் மீது, காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாடு வளர்ப்பவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த, அழிஞ்சிவாககம், நெடுவரம்பாக்கம், சத்திரம் உள்ளிட்ட கிராமங்களில், வீடு மற்றும் பண்ணைகளில், பசு மாடுகள் வளர்க்கப்படுகின்றன. அதிர்ச்சிஇந்நிலையில், இரண்டு மாதங்களாக மேற்கண்ட கிராமங்களில், பசு மாடுகள் திருடு போகின்றன. திருடு போகும் மாடுகள், அதே பகுதியில் வைத்து கொன்று, அதன் தலை மற்றும் கால்களை விட்டுவிட்டு, இறைச்சியை மட்டும் எடுத்து செல்கின்றனர்.மாடுகளை பறி கொடுத்தவர்கள், அவற்றை தேடி செல்லும்போது, புதர் மற்றும் கிணறுகளில் மாட்டின் தலை, குடல், தோல் ஆகியவை மட்டும் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைகின்றனர்.

இரண்டு மாதங்களாக, செவ்வாய் மற்றும் சனிக்கிழமை இரவுகளில், ஏராளமான பசு மாடுகள், திருடி இறைச்சிக்காக கொல்லப்பட்டு உள்ளன.கடந்த மாதம், சத்திரம் கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி என்பவரது, இரண்டு மாடுகள் திருடு போனது. அந்த மாடுகளின் தலை மற்றும் தோல் அப்பகுதி கிணற்றில் கிடந்தன.நேற்று முன்தினம், அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் பண்ணையில் இருந்து, பசு மாடு ஒன்று திருடு போனது. பண்ணையில் இருந்து, 500 மீட்டர் தொலைவில் மாட்டினை குடல் மற்றும் கழிவுகள் கிடந்தன.நள்ளிரவில் மாடு திருடியவர்கள் அதை கொன்று, இறைச்சியை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்றதை அங்கேயே விட்டு சென்று உள்ளனர்.அச்சம்இது தொடர்பாக பண்ணை மேலாளர் மோகன்ராஜ், சோழவரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.

இது போன்று, அத்திப்பேடு பகுதியை சேர்ந்த பாண்டியன், அழிஞ்சிவாக்கம் கிராமத்தை கிஷோர் என, 20க்கும் மேற்பட்டோரது பசு மாடுகள் இதுவரை இறைச்சிக்காக திருடப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டு உள்ளன.மாடுகளை பறிகொடுத்தவர்கள் சோழவரம் காவல் நிலையத்தில், புகார் தெரிவித்தும், கொரோனாவை காரணம் காட்டி நடவடிக்கை இன்றி கிடக்கிறது.இறைச்சிக்காக பசு மாடுகள் திருடு போவது தொடர் கதையாக இருப்பதால், மாடு வளர்ப்பவர்கள் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.'கடும் நடவடிக்கை தேவை' புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக்காக கடந்த, ஜூன் மாதம் துவக்கத்தில் இருந்து, ஒவ்வொரு வாரமும் மாடுகள் திருடு போவது தொடர் கதையாக உள்ளது.

மாடுகளை கொடூரமாக கொன்று, இறைச்சியை மட்டும் எடுத்து செல்கின்றனர். பசு மாடுகளை கொடூரமாக கொன்று குவிக்கும், இதுபோன்ற சமூக விரோதிகள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏ.ஸ்ரீதரன், சித்தி விநாயகர் பண்ணைஅழிஞ்சிவாக்கம், சோழவரம்.'வாழ்வாதாரம் போச்சு' நான் மூன்று பசு மாடுகளை வைத்து, பால் வியாபாரம் செய்து, வருவாய் ஈட்டி வந்தேன். என்னுடைய இரண்டு பசு மாடுகளை இறைச்சிக்காக, ஒரே நாளில், திருடி கொன்று விட்டனர். குடும்ப உறுப்பினர்களை போல் ஆசையாய் வளர்த்த மாடுகளும் போச்சு; என்னுடைய வாழ்வாதாரமும் போச்சு. காவல் துறையில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இன்றி கிடக்கிறது.

எஸ் மாசிலாமணி, சத்திரம் கிராமம், சோழவரம்.'சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' பசு மாடுகள் திருடப்படுவது தொடர்பாக இதுவரை, இரண்டு புகார்கள் மட்டுமே வந்து உள்ளன. அதன் மீது வழக்கு பதிந்து, புலன் விசாரணை செய்து வருகிறோம். பசு மாடுகளை திருடி கொல்லும், மாடு திருடர்களை விரைவில் பிடித்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.என்.எஸ்.நாகலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர்சோழவரம் காவல் நிலையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X