பொது செய்தி

தமிழ்நாடு

'உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, துாக்கம் இருந்தால் தப்பலாம்'

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

கோவை:கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, 'டார்கெட் ஜீரோ' சூழல் அமைப்பு சார்பில், கொரோனா குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நடந்தது.கோவை டாக்டர் நேமிநாதன் பேசியதாவது: கோவையில் கொரோனா பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில், ஊரடங்கு போடாமல், கட்டுப்படுத்த முயற்சித்தனர்; முடியவில்லை. நம் நாட்டு அரசு முன்கூட்டியே, ஊரடங்கு போட்டதால், சமூக பரவல் தள்ளி போடப்பட்டிருக்கிறது.உயிரிழப்புகளை குறைக்க, கையாள வேண்டிய உத்திகளை, மருத்துவர்கள் இப்போது தெரிந்து கொண்டிருக்கின்றனர். ஊரடங்கு கால இடைவெளியில், தேவையான வசதிகளை அதிகரித்து விட்டோம். அந்த வகையில், ஊரடங்கு முன்கூட்டியே பிறப்பித்தது பயனுள்ளதாக இருந்தது.சரியான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, துாக்கம் இருந்தால், தப்பித்தவறி கொரோனா வந்தாலும், பாதிப்பு பெரிதாக இருக்காது. தடுப்பூசி மருந்து குறுகிய காலத்தில் வர வாய்ப்பில்லை. அரசு தெரிவித்துள்ள நடைமுறைகளை கடைபிடித்தால், கொரோனா பிடியில் இருந்து மீண்டு விடலாம்.இவ்வாறு, நேமிநாதன் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X