பொது செய்தி

தமிழ்நாடு

குடும்ப அட்டைதாரர்களுக்கு 80 லட்சம் 'மாஸ்க்' வழங்க முடிவு

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

கோவை:கோவை மாவட்டத்தில் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் படி, 80 லட்சம் முககவசம் வழங்கப்படவுள்ளன.குடும்ப அட்டைதாரர்களுக்கு, எண்ணிக்கையின் படி ஒருவருக்கு, இரண்டு வீதம் முககவசம் வழங்கும் திட்டம், தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது. கோவையில், 10 லட்சத்து 14 ஆயிரத்து 600 குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இதில், 9 லட்சத்து 27 ஆயிரத்து 455 அட்டைகள் அரிசி அட்டை பிரிவின் கீழ் உள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன், முககவசமும் வழங்கப்படவுள்ளது. மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில், 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கையின் படி, 80 லட்சம் முககவசங்கள் வழங்கபடவுள்ளன' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X