பண மோசடி வழக்கு: அசோக் கெலாட் சகோதரருக்கு அமலாக்கத்துறை சம்மன்

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Rajasthan CM Ashok Gehlot, Rajasthan, CM Ashok Gehlot, Ashok Gehlot, Ashok Gehlot brother, enforcement directorate

புதுடில்லி: பண மோசடி வழக்கில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ராசென் கெலாட் நாளை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

ராஜஸ்தான் முதல்வர், அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ராசென் கெலாட். இவர், உர வியாபார நிறுவனம் நடத்தி வருகிறார். , 2007 - 2009ல் ராஜஸ்தானில் விவசாயிகளுக்கு பொட்டாஷியம் உரம் இறக்குமதி செய்ததில், ரூ.60 கோடி முறைகேடுகள் நடந்ததாக, சுங்கத்துறை மற்றும் வருவாய் புலனாய்வுப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், அக்ராசென் கெலாட்டிற்கு சுங்கத்துறை, ரூ.7 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.


latest tamil news




இந்த வழக்கில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து, 2013ம் ஆண்டு முதல், அமலாக்கத்துறை விசாரித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் ராஜஸ்தானில், ஆறு இடங்கள், குஜராத்தில், நான்கு இடங்கள், மேற்கு வங்கத்தில், இரண்டு இடங்கள், டில்லியில் ஒரு இடம் என மொத்தம், 13 இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள், மத்திய ரிசர்வ் படை போலீசாரின் உதவியுடன், சோதனை நடத்தினர். அக்ராசென் கெலாட்டுக்கு சொந்தமான, ஜோத்பூர் மாவட்டம், மான்டோரில் உள்ள பண்ணை வீடு, நிறுவனம், அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர்.

இதையடுத்து அக்ராசென் கெலாட் மீது அமலாக்கத்துறையினர் பண மோசடி மற்றும் சட்டவிரோத பணி பரிமாற்ற செய்ததாக வழக்குப்பதிவு இன்று (ஜூலை 29) ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
29-ஜூலை-202014:35:51 IST Report Abuse
s.rajagopalan அரசியல் பழிவாங்கல் .....என்று சொல்லி முடிச்சிறுவாங்கல் லே .....?
Rate this:
Cancel
29-ஜூலை-202008:43:00 IST Report Abuse
தமிழ் ராஜஸ்தான்ல ஆட்சியை புடிக்கிறவரைக்கும் இந்தமாதிரி காட்சியெல்லாம் நடக்கும். ஆட்சியை பிடித்துவிட்டால் இந்த வழக்கு எல்லாம் புஸ்ஸுனு போய்டும்.
Rate this:
Cancel
29-ஜூலை-202007:54:06 IST Report Abuse
தமிழ் ஆரம்பிச்சுட்டாங்களா.இனிமேல்தான் இவர்களுடைய ஆட்டம் ஆரம்பம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X