பசி எடுத்தா குனிஞ்சு வந்து சாப்பிடுங்க! இது, ஒலம்பஸ் அம்மா உணவக ஸ்டைல்| Dinamalar

தமிழ்நாடு

பசி எடுத்தா குனிஞ்சு வந்து சாப்பிடுங்க! இது, ஒலம்பஸ் அம்மா உணவக 'ஸ்டைல்'

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 29, 2020
Share
பசி எடுத்தா குனிஞ்சு வந்து சாப்பிடுங்க! இது, ஒலம்பஸ் அம்மா உணவக 'ஸ்டைல்'

கோவை:ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் உள்ள அம்மா உணவகம், பாதி மூடிய நிலையில் உள்ளது. சுகாதார வழிமுறைகள் ஏதும் கடைபிடிக்காமல், மூட்டைகள் அடுக்கிய குடோன் போன்ற அறையில், பொதுமக்கள் தரையில் அமர்ந்து சாப்பிடுகின்றனர்.கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ், 80 அடி ரோடு பகுதியில், அம்மா உணவகம் செயல்படுகிறது.
உணவகத்தின் ஷட்டர் பாதி மட்டுமே, திறந்து வைக்கப்பட்டுள்ளது.பசியுடன் சாப்பிட வருபவர்கள், சந்தேகத்துடன் குனிந்து உள்ளே நுழைந்து பார்க்க வேண்டும். சிலர் பின்புற கதவு வழியாக செல்கின்றனர்.பொதுமக்கள் சாப்பிடும் அறையில், அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு, குடோன் போல் இருட்டாக உள்ளது.
சாப்பிட இடம் இல்லாமல், பலர் தரையில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். சுகாதாரம் என்பது சுத்தமாக இல்லை. உணவகத்தின் அவலட்சணத்தை மறைக்கவே, ஷட்டரை பாதி திறந்து வைத்து செயல்படுவது தெரிந்தது. இந்த உணவகத்தின் நிலை, ஆய்வு செய்ய வரும் மாநகராட்சி அதிகாரிகளுக்குமா தெரியவில்லை?ஆய்வு செய்தால்தானே என்கிறீர்களா...அதுவும் சரிதான்!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X